டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 12,000 ஊழியர்களை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதை அடுத்து, இந்திய IT துறையின் மதிப்பீட்டு முறைகள் மாறப்போவதாக டெக் மஹிந்திராவின் முன்னாள் CEO மற்றும் ஐடி துறை நிபுணர் சி.பி.குர்னானி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பல மிடில் கிளாஸ் மக்களை பணக்காரர்களாக மாற்றிய பெருமை ஐடித்துறைக்கு உண்டு, அதிலும் குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு இதில் பங்கீடு அதிகம் என்றால் மிகையில்லை. இந்தியாவில் ஐடி துறைக்கு திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு வேண்டும் என்பதற்காக கல்லூரிகளுடன் இணைந்து கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வந்ததில் இருந்து இன்று நாட்டிலேயே அதிகப்படியான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்த ஒரு நிறுவனமாக விளங்குவது வரையில் டிசிஎஸ்-க்கு பெரும் பங்கு உள்ளது.

இந்த நிலையில் டிசிஎஸ் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது ஐடித்துறைக்கு பெரும் அதிர்ச்சி செய்தாக உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டிசிஎஸ்-ன் அறிவிப்பு ஒட்டுமொத்த ஐடி துறையை மாற்றப்போகு என டெக் மஹிந்திராவின் முன்னாள் CEO மற்றும் IT துறை நிபுணர் சி.பி.குர்னானி தெரிவித்துள்ளார்.
குர்னானி CNBC-TV18 உடன் பேசுகையில், இந்திய IT துறையில் இனி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு ஒரு நிறுவனத்தை மதிப்பிடு செய்யும் காலம் (வசந்த காலம்) இனி முடிவுக்கு வரப்போகிறது" என்று தெரிவித்தார். அதற்கு பதிலாக, ஒரு நிறுவனத்தின் output மற்றும் outcome அடிப்படையிலான வணிக மாதிரிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதை போல் நிறுவனங்கள் இனி IT மற்றும் சிஸ்டத்தை தனியாக பார்ப்பதை விட, இது வணிகத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் என்ன செய்யும் என்பதை கவனிக்க வேண்டும், விலை அடிப்படையிலான மாடல் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
TCS-இன் பணிநீக்கம் பற்றி பேசிய குர்னானி, தற்போது சில பழைய பணிகள் நீக்கப்படலாம் என்றாலும், செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார்.
இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளன, ஏனெனில் AI இன்ஜினியர்கள், டேட்டா சைன்டிஸ்ட், ப்ராம்ட் இன்ஜினியர்ஸ் என பல புதிய தொழில்நுட்பத்தில் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications