இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா குழுமத்திற்கு உட்பட்ட டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அண்மையில் தான் தங்கள் ஊழியர்களில் 2% பேரை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனம் பெங்களூருவில் பெரிய அளவிலான ஒரு அலுவலக இடத்தை லீசுக்கு எடுத்து இருப்பது தெரியவந்திருக்கிறது. பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் டிசிஎஸ் நிறுவனம் 1.4 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை லீசுக்கு எடுத்து இருக்கிறதாம் இதற்காக 2,130 கோடி ரூபாயை குத்தகை தொகையாக டிசிஎஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறதாம்.

மாதம் 9. 3 கோடி ரூபாய் என இந்த அலுவலகத்திற்கான வாடகத்தொகையாக வருகிறது. எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் டி சி எஸ் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் இந்த அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்து இருக்கிறது. லேப் ஜோன் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தான் டிசிஎஸ் நிறுவனத்திற்கு 15 ஆண்டுகளுக்கு இந்த அலுவலகத்தை குத்தகைக்கு வழங்கியுள்ளது.
இந்த அலுவலகத்திற்கு ஒரு சதுர அடிக்கு 66.5 ரூபாயை மாத வாடகையாக டிசிஎஸ் நிறுவனம் செலுத்த இருக்கிறது . குத்தகை ஒப்பந்தத்திற்காக செக்யூரிட்டி டெபாசிட் ஆக 112 கோடி ரூபாயி செலுத்தி இருக்கிறதாம். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்த வாடகை தொகை என்பது 12 சதவீதம் உயரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவின் ஐடி தலைநகரமாகவும் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் இருக்கும் பெங்களூருவில் தங்களுடைய இருப்பை விரிவாக்கம் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இந்த நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 4500 கோடி ரூபாய் அளவீட்டில் தங்களுடைய அலுவலகங்களை விரிவாக்கம் செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இது தவிர டிசிஎஸ் நிறுவனம் கோயம்புத்தூர் , ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் தங்களுடைய அலுவலகங்களை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 21.6 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடமிருந்து டிசிஎஸ் நிறுவனம் லீசுக்கு எடுத்து இருக்கிறது 99 ஆண்டுகள் இந்த குத்தகை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது , அதே போல கொச்சியில் 37 ஏக்கர் பரப்பளவு நிலத்தை 690 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. கொல்கத்தாவிலும் டிசிஎஸ் நிறுவனம் 30 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறது.
ஒருபுறம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை , ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்வது என அடுத்தடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் மீது புகார் வரும் நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய அலுவலக விரிவாக்கத்தையும் தொடர்ந்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications