டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் 10.18 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஹைதராபாத்தில் ஐடி மையமாக கருதப்படும் செலிங்கம் பள்ளி மண்டல் பகுதியில் தான் டிசிஎஸ் நிறுவனம் அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
இதற்காக மாதத்திற்கு 4.3 கோடி ரூபாயை டிசிஎஸ் வாடகையாக செலுத்த இருப்பது தெரியவந்துள்ளது. இந்த அலுவலக கட்டடம் 18 அடுக்குமாடிகளைக் கொண்டதாக இருக்கிறது. கடந்து அக்டோபர் மாதமே இந்த அலுவலக கட்டடத்தை குத்தகைக்கு எடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஏப்ரல் மாதம் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு டிசிஎஸ் நிறுவனம் இந்த கட்டடத்தை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டிடத்திற்கான வாடகை 12 சதவீதம் உயரும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு ஒரு மாதத்திற்கு 43 ரூபாய் என்ற அளவில் வாடகை கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்காக டிசிஎஸ் நிறுவனம் 26 கோடி ரூபாயை டெபாசிட் ஆக செலுத்தி இருக்கிறது.
இந்த அலுவலகத்தில் 1018 கார் பார்க்கிங் மற்றும் 452 இருசக்கர வாகன நிறுத்தமிடங்கள் இருக்கின்றன இவை அனைத்தையும் டிசிஎஸ் பயன்படுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களும் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. பிப்ரவரி மாதம் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் தன்னுடைய ஜிசிசி மையத்தை ஹைதராபாத்தில் நிறுவுவதற்காக 1.56 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை ஐந்தாண்டு காலத்திற்கு வாடகை எடுத்தது. மாதம் 1.43 கோடி ரூபாய் வாடகையாக செலுத்த இருக்கிறது.
கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹைதராபாத் அருகே இருக்கக்கூடிய மேகக்குடா பகுதியில் 181 கோடி ரூபாய்க்கு 25 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை வாங்கியது. டிசம்பர் மாதம் பேஸ்புக் நிறுவனம் ஹைதராபாத்தில் இருக்கும் 3.7 லட்சம் சதுர அடி பரப்பளவு அலுவலகத்தை மறுக்கட்டமைப்பு செய்தது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களுடைய ஜிசிசி மையங்கள் மற்றும் அலுவலகங்களை ஹைதராபாத்தில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் அலுவலக இடங்களில் 15 சதவீத அலுவலகங்கள் ஹைதராபாத்தில் தான் இருக்கின்றன . 2030ம் ஆண்டிற்குள் ஹைதராபாத்தில் அலுவலக தளங்களின் அளவு 200 மில்லியன் சதுர அடியாக உயரும் என சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் 12.3 மில்லியன் சதுர அடி அலுவலக இடம் பயன்பாட்டில் இருந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications