இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் லாபத்தை உயர்த்த திட்டமிட்ட வேளையில் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமலும், புதிய தொழில்நுட்பத்தில் உயர்தரச் சேவையை வழங்குவதிலும் ஆட்கள் பற்றாக்குறை எனப் பல விஷயங்களில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
சமீபத்தில் விப்ரோ வெளிநாட்டில் பணியாற்றும் மிடில் லெவல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ள அறிவிப்பு ஐடி ஊழியர்களைப் பீதியில் ஆழ்த்தியிருக்கும் வேளையில், டிசிஎஸ்-ன் முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தில் இதுவரையில் எவ்விதமான பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், அதன் ஊழியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள உயர்விலும், பதவி உயர்விலும் டிசிஎஸ் கைவைத்துள்ளது.
டிசிஎஸ் அறிவித்துள்ள return-to-office நடைமுறையை ஊழியர்களின் சம்பள உயர்வு, வேரியபிள் பே உடன் இணைத்துள்ளது. சமீபத்தில், டிசிஎஸ் நிறுவனத்தின் யூனிட் தலைவர்கள் அந்தந்த குழுக்களுக்குக் கிரேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்றது. இந்தக் கிரேடுகள் தான் ஒவ்வொரு ஊழியரின் பதவி உயர்வுக்கு அடிப்படையாகும்.
இந்தக் கிரேடு வழங்குவதில் ஒவ்வொரு ஊழியரின் அலுவலக வருகையை முக்கிய அளவுகோளாகப் பார்க்கப்பட்டு உள்ளது. அதாவது அலுவலக வேலை நாட்களில் அணியில் தேவைக்கு ஏற்ப அலுவலகம் வந்துள்ளார்களா என்பதை அடிப்படையாகக் கணக்கிட்டு கிரேடு கொடுக்கப்பட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் return-to-office விதிமுறையைப் பயன்படுத்தி ஊழியரின் சம்பள உயர்வு, வேரியபிள் பே, பதவி உயர்வு ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் ஊழியரின் திறன் மேம்பாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட Course-களை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு வெகுமதிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இது பெரும்பாலும் பிரஷ்ஷர்களுக்கு வழங்கப்பட்டதால் அவர்களின் 3 லட்சம் வருடாந்திர சம்பளத்தைத் தாண்டி கூடுதல் வருமானத்தைப் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications