அரியணையை இழந்த TCS.. 14 ஆண்டு சாதனையை முறியடித்த இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்..!!

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சுமார் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதன்முறையாக அதன் முக்கிய போட்டியாளர்களான இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்சிஎல்டெக் ஆகியவற்றை விட சந்தையில் இதன் மதிப்பு குறைந்துள்ளது.

நீண்ட காலமாக, TCS-இன் பங்குகள் எப்போதும் அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு தரமான அளவுகோலாக இருந்தது. ஆனால், இப்போது அதன் போட்டியாளர்களின் பங்குகளை விட குறைந்த லாப மதிப்பில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

அரியணையை இழந்த TCS.. 14 ஆண்டு சாதனையை முறியடித்த இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்..!!

டிசிஎஸ் பின்வாங்கியதற்கு என்ன காரணம்..?:TCS-இன் விலை-வருவாய் விகிதம் (P/E Ratio) தற்போது 22.5 மடங்கு என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது, இன்ஃபோசிஸின் 22.9 மடங்கு மற்றும் ஹெச்சிஎல்டெக்-இன் 25.5 மடங்கு ஆகியவற்றை விட குறைவாகும். இந்த P/E விகிதம் தான், ஒரு நிறுவனத்தின் பங்கை முதலீட்டாளர்கள் எவ்வளவு மதிப்பிடுகிறார்கள் என்பதை காட்டும் முக்கிய குறியீடு ஆகும். 2011 முதல் 2025 வரை, TCS-இன் P/E விகிதம் எப்பொழுதும் சந்தை சராசரியை விட 15% அதிகமாகவே இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாறியுள்ளது.

இந்த மதிப்பிழப்புக்கு முக்கியமான காரணம், TCS-இன் லாப வளர்ச்சி வேகம் குறைந்தது மற்றும் அதன் லாப விகிதம் (Margin) சுருங்கியதுதான். அதாவது, போட்டியாளர்களை போல வேகமாக லாபம் ஈட்ட முடியவில்லை. 2020 மார்ச் மாதம், முதல் 5 ஐடி நிறுவனங்களின் மொத்த மதிப்பில் TCS-இன் பங்கு சுமார் 55% ஆக இருந்தது. இப்போது அது 43.4% ஆக குறைந்துவிட்டது.

முதலீட்டாளர்களின் கவலை என்ன..?: கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.15.44 லட்சம் கோடி என்ற சாதனையை படைத்த TCS-இன் சந்தை மதிப்பு, தற்போது ரூ.11.3 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. அதாவது, அதன் மதிப்பில் சுமார் 27% குறைந்துள்ளது. மற்ற ஐடி நிறுவனங்களின் மொத்த மதிப்பு சரிவு 20% என்ற அளவில் இருந்தபோது, TCS மட்டும் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்திருப்பது, முதலீட்டாளர்கள் அதன் எதிர்கால லாபம் குறித்து கவலைப்படுவதை காட்டுகிறது.

Equinomics Research & Advisory Services-இன் தலைமைச் செயல் அதிகாரி ஜி. சொக்கலிங்கம் கூறுகையில், "சமீபத்திய காலாண்டுகளில் TCS-இன் லாப வளர்ச்சி குறைவும் லாப விகித சுருக்கமும் போட்டியாளர்களை விட மிக அதிகமாக இருந்தது. இந்த சுணக்கம் தொடரும் என்று முதலீட்டாளர்கள் பயப்படுவதால், பங்குகளின் மதிப்பு சரிய தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 12 மாதங்களில், TCS-இன் நிகர லாபம் வெறும் 4.4% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், முன்னணி 5 ஐடி நிறுவனங்களின் சராசரி வளர்ச்சி 6% ஆக இருந்தது. எனவே, புதிய ஒப்பந்தங்கள் குறைவது, வாடிக்கையாளர்களின் செலவினங்கள் குறைவது போன்ற காரணங்களால், TCS தனது இலக்கை அடைவது கடினம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+