இந்தியாவின் முன்னணி IT சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2024-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தில் பணி புரியும் பல மூத்த ஊழியர்களின் வேரியபிள் பே-வை குறைத்துள்ளது. ஏனெனில் தொடர்ந்து வணிகம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதால் இது போன்ற முடிவை எடுத்துள்ளதாக மணி கண்ட்ரோல் அறிக்கை தெரிவிக்கிறது.
சில ஊழியர்கள் எதிர்பார்த்த வேரியபிள் பே-வில் 20 சதவிதம் முதல் 40 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளனர். மற்றவர்கள் எந்த வித பேஅவுட்டையும் காணவில்லை. முந்தைய காலாண்டில் 70% வரை பே அவுட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

வேரியபிள் பே என்னும் போனஸ் தொகையை TCS நிறுவனம் அலுவலக வருகை, தனிப்பட்ட செயல்திறன் ஆகியவற்றை பொறுத்து வழங்குகிறது. ஆனால் சமீப காலமாக ஏற்பட்டுள்ள தேவை பிரச்சனைகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக சில IT நிறுவனங்கள் குறைந்த இலக்க வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது டிசிஎஸ் நிறுவனம் அதன் போனஸை வெகுவாக குறைத்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஊதிய கொள்கை: 2024-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் ஊழியர்களின் வருகை பதிவும் வேரியபிள் பே வழங்கும்போது ஒரு முக்கிய காரணியாக கருதப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. புதிய கொள்கையின் படி 60 சதவீதத்திற்கும் குறைவான நேரம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேரியபிள் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. அலுவலக வருகைப் பதிவு 60 முதல் 75% வரை உள்ள ஊழியர்கள் 50 சதவீத வேரியபிள் பே-வை பெற தகுதியுடையவர்கள். அதே நேரத்தில் 75 முதல் 85 சதவீதம் வருகை பதிவு இருக்கும் ஊழியர்கள் 75 சதவீத வேரியபிள் பே பெற தகுதியுடையவர்கள்.
வேரியபிள் பே என்பது ஒவ்வொரு நிறுவனங்களையும் பொறுத்து மாறுபடும். அதாவது குறிப்பிட்ட சதவீதத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போனஸ் ஆக வழங்குவார்கள். இந்தத் தொகை ஊழியரின் வருகை, செயல்திறன் போன்ற பல்வேறு காரணங்களை பொறுத்து வழங்கப்படுகிறது. தற்போது டிசிஎஸ் நிறுவனம் இதை குறைத்து வழங்கியுள்ளது.
2025-ஆம் நிதியாண்டின் Q 2 காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5.5 சதவீத வருவாய் வளர்ச்சியை பதிவு செய்தது. அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் ரூ.64,259 கோடியாக இருந்தது மேலும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,909 கோடியாக உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரலில், TCS நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வை அறிவித்தது. சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பெற்றனர். சீஃப் HR அதிகாரியான மிலிந்த் லக்காட், செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு 4.5 முதல் 7 சதவீதம் இருக்கும் என்றும், உயர் செயல்திறன் கொண்டவர்கள் இரட்டை இலக்க உயர்வுகளைப் பெறுவார்கள் என்றும் கூறினார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications