டாடா குழுமத்தின் குபேரனாக விளங்கும் ஐடி சேவை பிரிவாகவும், இந்தியாவில் அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் நிறுவனமாகவும் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்று காலாண்டு முடிவுகள் உடன், முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கும் வகையில் பைபேக் திட்டத்தையும் அறிவிக்க உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்தாவது பைபேக் திட்டத்தை இன்றும் அறிவிக்க உள்ளதால் அனைத்து டெக் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் கவனமும் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளது. பைபேக் திட்டம் குறித்து திட்டத்தை அக்டோபர் 11 ஆம் தேதி, அதாவது இன்று நிர்வாகக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. இது ஒப்புதல் பெற்றால் அடுத்த சில மணிநேரத்தில் வெளியாக உள்ல டிசிஎஸ் காலாண்டு முடிவில் இந்த பைபேக் திட்ட அறிவிப்பும் வரும்.

டிசிஎஸ் நிறுவனம் இதற்கு முன்பு 2022இல் ரூ.4,500 விலையில் சுமார் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப வாங்கியது. அதற்கு முன்பு 2020, 2018 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மூன்று பைபேக் திட்டத்தில் தலா 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப வாங்கியது. இதை 3000 ரூபா, 2100 ரூபாய், 2850 ரூபாய் என்ற விலையில் இந்த 3 ஆண்டுகளில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பைபேக் திட்டம் என்பது ஒரு நிறுவனம் பொது வர்த்தக சந்தையில் இருக்கும் பங்குகளையும், பிற முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் பங்குகளையும் குறித்த விலையில் வாங்குவது தான். இதன் மூலம் பங்குகளை விற்பனை செய்யும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும், சந்தையில் புழக்கம் குறைவதால் எஞ்சியுள்ள முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு அதிகரிக்கும்.
அப்படி டிசிஎஸ் கடந்த 6 வருடத்தில் அறிவித்த 4 பைபேக் திட்டத்தின் மூலம் சுமார் 66000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. இன்று பைக்பேக் திட்டத்தை அறிவித்தால் 2017 ஆம் ஆண்டில் இருந்து 5வது பைபேக் திட்டமாக இருக்கும்.
டிசிஎஸ் நிர்வாகம் இந்த முறையும் 2022 ஆம் ஆண்டு போல் 18000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டம் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது, இதேபோல் இந்த தொகை 25000 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் 2017 முதல் டிசிஎஸ் பைபேக் அறிவிக்கும் முன்பு டிசிஎஸ் பங்குகள் 4 முறையும் உயர்ந்தது. ஆனால் பைபேக் அறிவிக்கப்பட்ட பின்பு 4ல் 2 முறை பங்குகள் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications