சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் (Tata Consultancy Services) மூத்த ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக வேரியபிள் பே தொகையில் (Variable Pay) குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஐடி ஊழியர்களின் சம்பளத்தில் 20-40 சதவீதம் தொகையை, செயல்திறன் அடிப்படையிலான வேரியபிள் பே தொகையாக அளிக்கப்படுகிறது.
இந்த தொகை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு 3 மாதத்திற்கும் அளிக்கப்படும் வேளையில், ஐடி நிறுவனங்கள் தங்களுடைய செயல்திறன் மற்றும் ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் இந்த தொகையை வழங்கும். இந்த நிலையில் தான் டிசிஎஸ் தனது மூத்த ஊழியர்களுக்குத் தொடர்ச்சியாக 2வது காலாண்டாக வேரியபிள் பே தொகை குறைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலக வருகை கொள்கையை முழுமையாகப் பின்பற்றியும் ஊதிய குறைப்பு அறிவிக்கப்பட்டதால் ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. டிசிஎஸ் கடந்த சில காலாண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் முறையிலிருந்து முழுமையாக வெளியேறி பெரும் பகுதி ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்து உள்ளது.
இதை சிறப்பாகச் செயல்படுத்த ஊழியர்களின் அலுவலக வருகையும், வேரியபிள் பே தொகை வழங்குவதில், திறன் அளவீடாகச் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த வேளையில் அதிகப்படியான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தும் வேரியபிள் பே கொடுக்காதது ஊழியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலாண்டில் ஜூனியர் நிலை ஊழியர்கள் முழுமையான வேரியபிள் பே தொகையைப் பெற்றனர். ஆனால் மூத்த ஊழியர்களுக்கு 20-40% வேரியபிள் பே தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மற்ற அனைவருக்கும் இதை கட் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 70% வேரியபிள் பே வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த முடிவு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் டிசம்பர் காலாண்டுக்கு சுமார் 70 சதவீத ஊழியர்களுக்கு வேரியபிள் பே கிடைக்கும் என்றும், இதில் பெரும்பாலானவர்கள் ஜூனியர் ஊழியர்களாக இருப்பார்கள் என்றும், மீதமுள்ள மூத்த ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் பிஸ்னஸ் யூனிட்-ன் செயல்திறன் அடிப்படையில் வேரியபிள் பே தொகை கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த முடிவு டி.சி.எஸ் நிறுவனத்தின் அலுவலக வருகை கொள்கைக்கு ஏற்ப, ஊழியர்கள் குறைந்தபட்சம் 85% அலுவலக வருகை இருந்தால் மட்டுமே வேரியபிள் பே தொகை பெற தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள். வருகை குறைவாக இருந்தால் அதற்கேற்ப வேரியபிள் பே குறைப்பு ஏற்படும்.
அலுவலக வருகை கொள்கையை முழுமையாக பின்பற்றியும் மூத்த ஊழியர்களுக்கு மாறிவரும் ஊதியத்தில் குறைப்பு ஏற்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலை ஊழியர்களின் ஊதிய நிர்ணயத்தில் மாறிவரும் அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. தனிப்பட்ட செயல்திறனைத் தாண்டி பல்வேறு காரணிகள் மாறிவரும் ஊதியத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் செய்தி தொடர்பாளர் கொடுத்துள்ள பதிலில், நாங்கள் ஊகங்களுக்குப் பதில்களை அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் டிசிஎஸ் ஊழியர்கள் வேரியபிள் பே தொடர்பான அறிவிப்பு வரும் வரையில் காத்திருந்து தெரிந்துகொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்களுடைய காலாண்டு லாபத்தை அதிகரித்து முதலீட்டாளர்களுக்குக் காட்டக் கைவைக்கும் இடமாக ஊழியர்களின் வேரியபிள் பே தொகை இருக்கும் காரணத்தால் ஒவ்வொரு காலாண்டுக்கும் இத்தகைய கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து வருகிறது.
More From GoodReturns

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

TCS முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!12% எகிறிய லாபம்! 30 காலாண்டுகளில் இல்லாத தரமான சம்பவம்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications