இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனத்தின் மீது வெளியாகி இருக்கக்கூடிய புகார்கள் ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர்ச்சடைய வைத்துள்ளது.
கடந்த ஓராண்டு காலமாகவே டிசிஎஸ் நிறுவனம் அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறது. முதலில் தங்களுடைய ஊழியர்களில் இரண்டு சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு டிசிஎஸ் நிறுவனம் ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர வைத்தது. இந்த சூழலில் தங்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கின்றனர் என ஏராளமான ஊழியர்கள் புகார் கூறினர். பணிநீக்கம் செய்வதாக கூறியது 12000 பேர் ஆனால் உண்மையில் வேலையை விட்டு அனுப்பியது 30,000 பேர் என ஏராளமான ஐடி ஊழியர்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பதிவு செய்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் சற்றே தனிந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் மீது மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு ஒட்டுமொத்த கார்ப்பரேட் வட்டாரத்திலுமே புயலை கிளப்பி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்படக்கூடிய டிசிஎஸ் அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் சுரண்டல் மற்றும் மதமாற்ற முயற்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய பல்வேறு பெண் ஊழியர்களும், ஒரு ஆண் ஊழியரும் நேரடியாக காவல் நிலையத்திலேயே புகார் தந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் முதலே பல ஊழியர்களும் அடுத்தடுத்து பல்வேறு காவல்நிலையங்களில் புகார் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நாசிக் காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு படையை அமைத்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதலில் ஒரு பெண் ஊழியர் தன்னுடன் பணியாற்றக்கூடிய ஆண் ஊழியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதே போல மத ரீதியாக பேசுவதாகவும் மத மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார். இதனை அடுத்து ஏராளமான ஊழியர்கள் மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் இதே போன்ற ஒரு புகாரை தந்து இருக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 8 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஊழியர்கள் தரப்பில் பலமுறை மனிதவளத்துறை இடம் புகார் தந்தும் அவர்கள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாகவே காவல் நிலையம் வரை சென்றதாக அந்த டிசிஎஸ் ஊழியர்கள் கூறியிருக்கின்றனர்.
தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். டீம் லீடர் தொடங்கி ஹெச்.ஆர் வரை இந்த பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் உருவாக்கியுள்ளனர். அதில் பெண் ஊழியர்களிடம் பழகி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து யார் எந்த ஊழியரை டார்கெட் செய்வது, யார் எளிய இலக்கு என்பதை எல்லாம் ஆலோசனை நடத்தி திட்டமிட்டு பாலியல் தொந்தரவு, மத மாற்ற முயற்சி ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் தொடர்ச்சியாக புகார்கள் வந்ததை அடுத்து மகளிர் காவலர்கள் ஆறு பேர் டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நாற்பது நாட்கள் மஃப்டியில் சென்று வேலை செய்து ஊழியர்களின் நடத்தைகளை கண்காணித்துள்ளனர். அப்போது சில ஊழியர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டு தீவிரமாக கண்காணித்துள்ளனர். அதில் தான் குரூப்பாக செயல்பட்டு பெண் ஊழியர்களை டார்கெட் செய்து வேலை செய்தது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது இந்த விசாரணைக்கு டிசிஎஸ் தரப்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என கூறியுள்ளார். பாலியல் தொல்லை, மதமாற்ற முயற்சி உள்ளிட்டவற்றை எல்லாம் ஒரு போதும் ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

TCS முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!12% எகிறிய லாபம்! 30 காலாண்டுகளில் இல்லாத தரமான சம்பவம்!

மீண்டும் மீண்டுமா..? டெக் நிறுவனங்களை கேள்வி கேட்க ஆளே இல்லையா? அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சி

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications

