இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதும் ஒட்டுமொத்த இந்தியாவையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அமைந்துள்ள டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் ஆண் ஊழியர்கள் ஒரு சிண்டிகேட் அமைத்து அதன் மூலம் உடன் பணியாற்றக்கூடிய இந்து பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் கட்டாய மதமாற்றம் செய்ய நிர்பந்தம் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த சம்பவம் நடந்து வருவது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தில் டீம் லீடர் உள்ளிட்ட பணிகளில் வேலை செய்த ஆண்கள் மற்றும் ஹெச்ஆர் ஆக வேலை செய்த ஒரு இஸ்லாமிய பெண் உள்ளிட்ட அனைவருமே ஒரு பிரத்தேக whatsapp குழுவை உருவாக்கி இந்து பெண்களை இலக்கு வைத்து அவர்களை பாலில் தொந்தரவு செய்துள்ளனர். மேலும் கட்டாயமாக இஸ்லாமிற்கு மதமாற்ற முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினர் மஃப்டியில் சென்று இந்த அலுவலகத்தில் நாற்பது நாட்கள் வேலை செய்து தகவல்களை சேகரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஊழியர்களை கைது செய்திருக்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனத்திலேயே இப்படி ஒரு மதமாற்ற கும்பல் செயல்பட்டு இருக்கிறதா என்ற அதிர்ச்சி நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக டிசிஎஸ் தரப்பிலும் காவல்துறையினர் தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மதமாற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டினர் உடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பன உள்ளிட்ட கோணங்களில் எல்லாம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளையில் குறிப்பிட்ட சில ஆண் ஊழியர்கள் எப்படி எல்லாம் பெண் ஊழியர்களை இலக்கு வைத்து டார்ச்சர் செய்தார்கள் என்ற விவரங்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு குறித்த கேள்விகளை வலுவாக எழுப்புகிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் நிலைமை இப்படி இருக்க இன்போசிஸ் நிறுவனத்தின் மீதும் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இன்போசிஸின் புனே அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு பெண் இங்கே இருக்கக்கூடிய சில ஊழியர்கள் பாலில் தொல்லை தருவதாக பதிவு செய்திருந்தார். இதற்கு பதில் தந்திருக்கும் இன்போசிஸ் நிறுவனம் இந்த குறிப்பிட்ட சமூக வலைத்தள பதிவு குறித்து நாங்கள் அறிந்தோம் எங்களுடைய நிறுவனத்தில் எந்த விதமான தொந்தரவுக்கும் பாகுபாடுக்கும் இடம் கிடையாது இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறது. ஊழியர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தங்களுடைய பிரச்சனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறது.
இந்த சூழலில் மற்றொரு பெரிய டெக் நிறுவனமான டெக் மகேந்திரா ஒரு மினி பாகிஸ்தானை போட செயல்படுவதாக மற்றொரு குற்றச்சாட்டு வெளியாகிய அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. மும்பையின் கோரேகானில் உள்ள டெக் மகேந்திரா அலுவலகத்தில் மதரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக ஒரு ஊழியர் மெசேஜ் அனுப்பினார் என வழக்கறிஞர் துபே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த அலுவலகத்தில் ஹெச் ஆர் வேலையில் இருப்பவர் ஒரு இஸ்லாமியர் அதனால் அவர் இங்கே 60% ஆண் ஊழியர்களை இஸ்லாமியர்களாகவே வைத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார். இங்கே வேலை செய்வதற்கே பயமாக இருக்கிறது என கூறியிருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு என இவர்களிடம் எந்த ஒரு கார்ப்பரேட் கொள்கைகளும் இல்லை அவர்கள் புர்கா மற்றும் மஹாப்களை அணிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இது ஒரு மினி பாகிஸ்தான் போல செயல்படுகிறது என அந்த மெசேஜில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றொரு நபர் டெக் மகேந்திரா அலுவலகத்தில் ரம்ஜான் முடியும் உணவகத்தில் காலணி அணிந்து வர கூடாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதாக புகார் கூறியுள்ளார். இதனை மறுத்துள்ள டெக் மகேந்திரா இது எங்களுடைய அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல அதேபோல நாங்கள் இஸ்லாமியர்களை பணியில் அமர்த்தவே முக்கியத்துவம் தருகிறோம் என கூறுவதிலும் உண்மை இல்லை என கூறி இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பணியிட சூழலை உருவாக்குவதில் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம் என்றும் அனைவருமே எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் தான் நடத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications