ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தான் அனைத்து கார்ப்பரேட் அலுவலகங்களிலுமே விசாகா கமிட்டி என்பது அமைக்கப்பட்டிருக்கும். இந்த விசாக கமிட்டியில் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ள கூடிய அனைத்து விதமான பிரச்சனைகள் குறிப்பாக பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் தரலாம்.

இது தொடர்பாக இந்தியாவில் சட்டமே நடைமுறையில் உள்ளது. இதன்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குழுவில் குறைந்தது பாதி அளவு பெண்கள் இருக்க வேண்டும், ஒரு பெண் தலைவராக இருக்க வேண்டும். புகார் தரும் பெண்ணின் விவரங்கள் வெளியே வராத வகையில் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்த விசாகா கமிட்டியின் பொறுப்பு.

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

இந்த நிலையில் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் அலுவலகத்தில் நீண்ட ஆண்டுகளாக ஏராளமான பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டதும் கட்டாயம் மதமாற்றத்திற்கு நிர்பந்தம் செய்யப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையுமே அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்திய கார்ப்பரேட் அலுவலகங்கள் பெண்களுக்கான பாதுகாப்பை தர மறுக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனம் அனைத்து நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட வேண்டிய டிசிஎஸ் நிறுவனத்திலேயே இப்படி ஒரு நிலையா என்ற கேள்வி எழுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அமைந்துள்ள டிசிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிபிஓ அலுவலகத்தில் பல்வேறு பெண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு முதல் இது நடந்துள்ளது. பெண் ஊழியர்கள் அளித்த புகாரை அடுத்து நாசிக் காவல்துறையினர் பெண் காவலர்களை மஃப்டியில் அனுப்பி 40 நாட்களாக அவர்கள் மத்தியில் இந்த அலுவலகத்தில் வேலை செய்வதை போல கண்காணிக்க வைத்துள்ளனர்.

Also Read

அதில் குறிப்பிட்ட சில ஊழியர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு பெண்களை இலக்கு வைத்து அவர்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு நிர்பந்தம் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்தியாவின் நம்பகத்தன்மை கொண்ட ஒரு அலுவலகத்திலேயே இப்படி ஒரு நிலைமையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்வுகளுக்கு ஹெச்ஆரில் வேலை செய்யக்கூடிய ஒரு பெண் உதவியாக இருந்தாரா என்று கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

இங்கே ஹெச்.ஆர் மேனேஜராக பணிபுரிந்து வந்த நிதா கான் என்ற பெண் மேலாளர் தான் விசாகா கமிட்டி அமைப்பது பெண்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பானர். ஆனால் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் பாதிக்கப்பட்ட பெண்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டு. அதாவது பலமுறை தாங்கள் புகார் கூறியும் அவர் அதனை ஒரு பொருட்டாக ஏற்கவில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். மேலும் அமைதியாக இருக்கும்படி நிர்பந்தம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் தான் அவரும் இந்த குழுவில் ஒருவரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டி சி எஸ் நிர்வாகம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலரான ஆர்த்தி சுப்பிரமணியன் இது தொடர்பாக விசாரணை நடத்த தொடங்கி இருக்கிறார்.

Recommended For You

இந்த சூழலில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பை, கார்ப்பரேட் அலுவலகங்களில் ஊழியர்கள் தங்களின் பிரச்சினைகளை கொண்டு செல்ல முறையாக அமைப்பினை உருவாக்க தவறியதே இதற்கு காரணம் என்கிறார். அதாவது தங்களின் நேரடி மேலாளர் என இல்லாமல் அவருக்கு மேல் நிலையில் இரண்டு மூன்று மேலாளர்களிடன் ஊழியர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார். தங்களின் டீம் லீடரே இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது ஊழியர்களால் அந்த பிரச்சினையை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது தான் இது தீரும் என்கிறார்.

அனைத்து அலுவலகங்களிலுமே விசாகா கமிட்டி இருக்கும், முதலில் பெண்கள் இதில் முறையிடலாம், அதில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தும் தீர்வு கிடைக்கவில்லை எனும் நேரடியாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் நம் டீம் லீடரை பகைத்து கொண்டால் வேலைக்கு பிரச்சினை வந்துவிடுமோ அல்லது வேறு விதமான தொல்லைகள் ஏற்படுமோ என அச்சப்படுவது தவறு. டிசிஎஸ் நிறுவன பிரச்சினை 2022 முதல் இருந்துள்ளது, ஆனால் ஒரு பெண் ஊழியர் தைரியமாக காவல்நிலையத்திற்கு சென்று அளித்த புகார் தான் மிகப்பெரிய பணியிட பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பலருக்கும் நியாயம் ஏற்பட வழிவகை செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+