நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 0.27 சதவீதம் அதிகரித்து, 32,430 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே முந்தைய ஆண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 32,340 கோடி ரூபாய் என இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே கடந்த நிதியாண்டில் வருவாய் 4.6% அதிகரித்து, 1,64,177 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 1,56,949 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இதே இயக்க அளவு 25.9% ஆகவும், இதே நிகர அளவு 20.3% ஆகவும் இருந்துள்ளது. இதே நிதியாண்டின் இறுதியில் ஆர்டர் புக் 31.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டினை காட்டிலும் 17.1% அதிகரித்துள்ளது.
இதே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 14.9% அதிகரித்து, 9,246 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 8,049 கோடி ரூபாயாக இருந்தது. இதே வருவாய் 9.4% அதிகரித்து, 43,705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 39,946 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலாண்டிற்கான ஆர்டர் புத்தகம் கடந்த காலாண்டில் 9.2 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது காலாண்டில் மிக அதிக TCV என டிசிஎஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டிற்கான டிவிடெண்டினையும் அறிவித்துள்ளது. இது ஒரு பங்கிற்கு 15 ரூபாய் அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications