ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் டிசம்பர் காலாண்டில் அதன் நிகரலாபம் 7.18% அதிகரித்து, 8,701 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 8,118 கோடி ரூபாயாக நிகரலாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 16.4% அதிகமாகும்.
இது கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபம் 7,475 கோடி ரூபாயாக இருந்தது.
வருவாய் எவ்வளவு?
இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 42,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.42 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.68 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் டிசிஎஸ்ஸின் வருவாய் 39,854 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த காலாண்டில் 40,135 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் அறிவிப்பு?
டிசிஎஸ் நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்கிற்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஒன்பது ஆண்டுகள் மிக வலுவான காலாண்டு வருவாயினை இந்த டிசம்பர் காலாண்டில் கண்டுள்ளது. இது பல புதிய ஒப்பந்தங்கள் மற்றும் நிலையான நாணய வருவாய் என பல காரணங்களினால் கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு மிக்க நன்றி
இந்த லாபத்திற்கு ஒரு வகையில் கொரோனாவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கொரோனாவின் காரணமாக சர்வதேச அளவில் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது ஐடி துறை மட்டும் அல்ல, இன்றளவிலும் பல துறைகளிலும் டிஜிட்டல் தேவையை ஊக்குவித்துள்ளது. இதன் காரணமாக டிஜிட்டல் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தன. இதுவே வலுவான வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது.
டிசிஎஸ் பங்கு விலை
டிசிஎஸ் பங்கு விலையானது கடந்த ஆண்டில் 32.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த டிசம்பர் மாதத்தில் 15 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் மதிப்பானது, கடந்த ஆண்டில் 55 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த டிசம்பர் காலாண்டில் 21.55 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் இதன் பங்கு விலையானது 2.90% அதிகரித்து, 3120.90 ரூபாயாகவும் அதிகரித்து முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications