இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் பிரிட்டன் நாட்டில் கடந்த 3 வருடத்தில் செய்திடாத வகையில் மிகப்பெரிய ஒப்பந்தத்தைச் செய்து அசத்தியுள்ளது.
இந்திய ரெசிஷன் காலத்தில் புதிய வர்த்தகத்தைப் பெறுவது மிகவும் கடினம், இதைவிட முக்கியம் அதிக மதிப்புடைய திட்டங்களைப் பெறுவது மிகவும் கடினம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ரெசிஷனில் பெரிய அளவில் பாதிப்புகளை எதிர்நோக்கி வரும் பிரிட்டன் நாட்டில் இருந்து மிகப்பெரிய தொகைக்குத் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் பெரும் மதிப்புடைய திட்டத்தைக் கைப்பற்றிய நிலையில் ஒட்டுமொத்த ஐடி துறைக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது, குறிப்பாகத் தினமும் பணிநீக்க அறிவிப்புகளைக் கேட்டு வரும் நிலையில் டிசிஎஸ் டீல் வேற லெவல்.
டிசிஎஸ்
Phoenix Group Holdings நிறுவனத்தின் சேவை, தயாரிப்புகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் மாபெரும் திட்டத்தைத் தான் டிசிஎஸ் கைப்பற்றியுள்ளது. சுமார் 600 மில்லியன் பவுண்ட் அதாவது 723 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கு இன்று இருதரப்பும் கையெழுத்திட்டு உள்ளது.
723 மில்லியன் டாலர் ஒப்பந்தம்
டிசிஎஸ் நிறுவனம் Phoenix Group Holdings-க்கு ஏற்கனவே பல சேவைகளை அளித்து வரும் வேளையில் இந்த 723 மில்லியன் டாலர் ஒப்பந்தம் என்பது புதிய வர்த்தக ஒப்பந்தமாகும். டிசிஎஸ் நிறுவனம் கடந்த 3 வருடத்தில் 723 மில்லியன் டாலர் என்ற பெரிய திட்டத்தைப் பெற்றது இல்லை, இதன் மூலம் பிரிட்டன் நாட்டின் டிசிஎஸ் வர்த்தகம் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வருகிறது.
ReAssure நிறுவனம்
இந்த ஒப்பந்தம் மூலம் டிசிஎஸ் நிறுவனம் Phoenix Group Holdings நிறுவனத்தின் கிளை நிறுவனமான ReAssure-ன் வரலாற்று ஆப்ரேஷன்ஸ்-ஐ மொத்தமாக டிசிஎஸ் நிதியியல் டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வர உள்ளது. ReAssure சுமார் 30 லட்சம் இன்சூரன்ஸ்-ஐ பிரிட்டன் நாட்டில் அளித்துச் சேவை அளித்து வருகிறது.
டெக் நிறுவனங்கள்
2023 ஆம் ஆண்டில் உருவாகியுள்ள மந்த நிலையில் உலகளவில் டெக் நிறுவனங்கள் தொழில்நுட்பத்திற்குக் குறைவாகச் செலவு செய்யும் நிலையில் டிசிஎஸ் போன்ற ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் இதை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர்
அதிலும் குறிப்பாக ஐரோப்பிய பகுதியில் இருக்கும் அனைத்து முன்னணி நாடுகளும் ரஷ்யா - உக்ரைன் போரின் மூலம் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் ஐரோப்பிய வர்த்தகப் பகுதியில் இருந்து 723 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைப் பெற்றுள்ளது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ராஜேஷ் கோபிநாதன்
கடந்த மாதம் டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் ஐரோப்பிய சந்தை என்பது தற்போது வர்த்தகத்திற்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது, ஆனால் அமெரிக்கா சந்தை பொருத்த வரையில் மொத்தமாகத் தலைகீழாக உள்ளது, வர்த்தகத்திற்கு ஆதரவாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications