TCS CEO பதவியை விட மும்பை, ஹிந்தி தான் கஷ்டம்..! முதல் நாளே Thug life செய்த கிருதிவாசன்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ன் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள கே கிருதிவாசன் மார்ச் 16 ஆம் தேதி முதலே சிஇஓ-வாக பெறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் டிசிஎஸ் சிஇஓ பதவியை காட்டிலும் பல முக்கியமான விஷயங்கள் தனது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். இவருடைய பதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மும்பை, ஹிந்தி பற்றி கே கிருதிவாசன் என்ன கூறியுள்ளார்..?!

Layoff மத்தியில் 2023ல புதிய வேலைவாய்ப்பில் சேர முடியுமா? ஐடி ஊழியர்கள் நிலைமை எப்படி இருக்கு..?! Layoff மத்தியில் 2023ல புதிய வேலைவாய்ப்பில் சேர முடியுமா? ஐடி ஊழியர்கள் நிலைமை எப்படி இருக்கு..?!

 கிருதிவாசன்

கிருதிவாசன்


மார்ச் 17 ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் பேசிய கே கிருதிவாசனிடம் சென்னையில் இருந்து மும்பை-க்கு செல்வது கடினமானதா அல்லது டிசிஎஸ் சிஇஓ-வாக பதவியேற்பது சவாலானதா..? என கேட்கப்பட்டது. கே கிருதிவாசன் தற்போது சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் இருந்துக் கொண்டு ஒட்டுமொத்த BFSI வர்த்தகத்தை நிக்வாகம் செய்து வருகிறார்.

மும்பை, சென்னை

மும்பை, சென்னை

இதற்கு பதில் அளித்த கே கிருதிவாசன், சென்னையில் இருந்து மும்பை-க்கு செல்வது தான் சவாலானது. சென்னை விட்டு செல்வது என்பது கடிமான முடிவு. இந்த அழைப்பில் இருப்பவர்கள் அனைவரும் இதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என கிண்டலாக சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

ராஜேஷ் கோபிநாதன்

ராஜேஷ் கோபிநாதன்

இந்த சந்திப்பில் கே கிருதிவாசன் மற்றும் ராஜேஷ் கோபிநாதன்-ம் கலந்துக்கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் செய்தியாளர்கள் ஹிந்தியில் கேள்விக்கேட்டனர். கோபிநாதன் இதற்கு எவ்விதமான தயக்கமும் இல்லாமல் பதில் அளித்தார்.

ஹிந்தி

ஹிந்தி

இதேபோல் கே கிருதிவாசன் அவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்டப்போது, பதிலளிக்க தன்மையாக மறுத்துவிட்டார். இது மட்டும் அல்லாமல் ஹிந்தி மொழி தனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் ஹிந்தியில் பேசி தவறு செய்ய விரும்பவில்லை என கூறிவிட்டு ஆங்கிலத்தில் பதில் அளிக்க துவங்கினார்.

கே கிருதிவாசன் கான்பிடென்ஸ்

கே கிருதிவாசன் கான்பிடென்ஸ்

டிசிஎஸ் நிறுவனத்தில் 34 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய காரணத்தால் டிசிஎஸ் கொள்கை, அடிப்படை திட்டம், இலக்கு அனைத்தும் தனக்கு தெரியும். இதேபோல் தான் பணி செய்யும் முறையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது தொடர்ந்து இதே முறையை தான் கடைப்பிடிப்பேன் என தெரிவித்தார்.

 ராஜேஷ் கோபிநாதன் செப்டம்பர் 15

ராஜேஷ் கோபிநாதன் செப்டம்பர் 15

ராஜேஷ் கோபிநாதன் டிசிஎஸ் நிறுவனத்தில் பதவியை ராஜினாமா செய்தாலும் செப்டம்பர் 15 வரையில் இப்பதவியில் இருப்பார், இக்காலக்கட்டத்தில் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள கிருதிவாசன் நிர்வாகத்தை கையில் எடுக்க உதவி செய்ய உள்ளார். 2017ல் என் சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவார நியமிக்கப்பட்ட போது இவருடைய பதவி ராஜேஷ் கோபிநாதன்-க்கு கொடுக்கப்பட்டது.

திருச்சி டூ டிசிஎஸ் சிஇஓ

திருச்சி டூ டிசிஎஸ் சிஇஓ

கே கிருதிவாசன் திருச்சி மாவட்டத்தின் மேளசிந்தாமணி பகுதியில் இருக்கும் ஈ.ஆர் மேல்நிலை பள்ளியில் தான் பள்ளி கல்வியை 1975 முதல் 1981 வரையில் முடிந்தார். இதை தொடர்ந்து கோயம்புத்தூர்-ல் இருக்கும் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பிஈ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் 1981 - 1985 பெற்றார். இதை தொடர்ந்து ஐஐடி கான்பூர் கல்லூரியில் M tech, Industrial and management Engineering பிரிவில் பட்டம் பெற்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS New CEO Krithivasan says Moving to Mumbai is difficult, refused answer in Hindi

TCS New CEO Krithivasan says Moving to Mumbai is difficult, refused answer in Hindi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X