அக்சென்சர் தனது வருவாய் இலக்குகளை 2024 ஆம் நிதியாண்டுக்குக் குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் இன்று அனைத்து ஐடி நிறுவனப் பங்குகளும் சரிந்துள்ளது. இதேவேளையில் இச்சரிவைச் சமாளிக்கும் வகையில் டிசிஎஸ் புதிய ஒப்பந்தம் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டென்மார்க்கை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமான ராம்போல் நிறுவனத்துடன் (Ramboll) பல கோடி டாலர் மதிப்பிலான ஐடி டிரான்ஸ்பார்மேஷன் சேவைகளுக்கான கூட்டணி ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக மார்ச் 21 ஆம் தேதி அறிவித்துள்ளது.

அடுத்த ஏழு ஆண்டுகளில், ராம்போல் நிறுவனத்தின் ஐடி செயல்பாட்டு முறையை மேம்படுத்தி, வணிகர் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, ஐடி செலவுக் குறைப்பதற்கும் உதவும் என்று ஒரு அறிக்கையில் TCS தெரிவித்துள்ளது.
மேலும், ராம்போல் நிறுவனத்தின் கிளவுட் மற்றும் டேட்டா சென்டர்களை நிர்வகித்தல், அப்பிளிகேஷன் உருவாக்கம் மற்றும் மெயின்டனென்ஸ், சைபர் செக்யூரிட்டி மற்றும் ஊழியர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் பணியிடம் ஆகிய சேவைகளை வழங்குவதன் மூலம், கார்பன் தடயத்தை குறைத்து, இந்நிறுவனத்தின் சேவை விரிவாக்கத்திற்கான திறனை அதிகரிக்க TCS உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய கூட்டணியின் ஒரு பகுதியாக, 12 நாடுகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட ராம்போல் ஐடி ஊழியர்களை TCS சேர்த்துக் கொள்ள இருக்கிறது. இதனால் ராம்போல் நிறுவனத்தின் செலவுகள் பெரிய அளவில் குறைவது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் நீட்டிக்கவும், ஒப்பந்த மதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
டென்மார்க்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் TCS, தனது வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு டெக் சேவைகள் மூலம் உந்து சக்தியாக இருந்து வருகிறது. இதேபோல் டென்மார்க் நாட்டில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி நிறுவனம் என்ற பெயரை 2014 ஆம் ஆண்டு முதல் TCS தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட ஒரு ஆய்வில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக நோர்டிக் நாடுகளில் (Nordics) வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது டிசிஎஸ்.
டிசிஎஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.24 சதவீதம் சரிந்து 3,923.85 ரூபாயாக உள்ளது, இன்று காலை வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications