இந்திய ஐடி துறை ஏற்கனவே பொருளாதார மந்த நிலை காரணமாகப் புதிய திட்டங்களைப் பெறுவதில் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மார்ஜின் அளவு தொடர்ந்து பெரும் சுமையாக இருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மூன்லைட்டிங் என்பது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது, இதைச் சரி செய்யும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
சந்தை மதிப்பீட்டு அளவில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதன் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கூடுதலான வேலைகளை (GIGs)செய்யப் புதிய தளத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.
கூடுதல் பணி
இத்தளம் தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விரைவில் டிசிஎஸ் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எப்படி ஐடி ஊழியர்கள் கூடுதல் அனுபவத்திற்காகவும், பணத்திற்காகவும் வேறு நிறுவனத்தில் கூடுதல் பணிகளைச் செய்கிறார்களோ, அதேபோல் இந்தத் தளமும் இயங்கும்.
ஐடி சேவை துறை
227 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறை முன்லைட்டிங் பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்தகைய தளம் மூன்லைன்ட்டிங் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என டிசிஎஸ் நிர்வாகம் நம்புகிறது. இத்தளத்தை அமைக்கத் தற்போது டிசிஎஸ் proofs of concept (PoCs) கொண்டு இயங்கி வருகிறது.
மிலிந்த் லக்காட்
டிசிஎஸ் நிறுவனம் உருவாக்க இருக்கும் இத்தளத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் அனைத்து விதமான டெக் பணிகளையும் செய்ய முடியும், ஆனால் பிற தளத்தில் இருப்பது போல் வாடிக்கையாளர்களிடம் (Client) நேரடியாகப் பேச முடியாது என டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் உயர் தலைவர் மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.
பணம் இல்லை
டிசிஎஸ் நிறுவனத்தில் சில முக்கியமான பணிகளை crowd-outsource மூலம் செய்ய முடியும். அது ஊழியர்களுக்கு அளிக்கப்படும், ஆனால் இந்தக் கூடுதல் பணிகளுக்குப் பணமாக வெகுமதி அளிக்கப்படமாட்டாது, ஆனால் மாறாகப் பிற வழிகளில் உரியப் பலன்களை அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது என டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் உயர் தலைவர் மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் முன்லைட்டிங்
விப்ரோ தொடர்ந்து இன்போசிஸ் முன்லைட்டிங் சேவைக்கு எதிராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், இரண்டு நிறுவனத்தில் ஓரே நேரத்தில் பணி செய்தவர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்போசிஸ் சில நாட்களுக்கு முன்பு Accelerate என்னும் தளத்தின் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் கூடுதல் பணிகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications