உலக அளவில் ஐடி துறைகள் மந்த நிலையை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இந்திய ஐடி நிறுவனங்களின் வருமானத்தை பெருமளவு பாதித்திருக்கிறது. இந்தியாவில் டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் பணி கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைத்திந்திய ஐடி ஊழியர்கள் சங்கத்தின் எதிர்ப்பையும் பெற்று இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் கொண்டு வந்திருக்கக்கூடிய கொள்கை மாற்றங்கள் ஊழியர்களுக்கு எதிரானவை என ஐடி ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஜூன் 12ஆம் தேதி அன்று நிறுவன கொள்கைகளை மாற்றி இருப்பதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் மனிதவள மேலாண்மை குழு என ஒன்று செயல்படுகிறது. ஊழியர்களை குறிப்பிட்ட ப்ராஜெக்ட்களுக்கு நியமனம் செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை இந்த குழு தான் மேற்கொள்கிறது. இந்த மனிதவள மேலாண்மை குழு தான் புதிய கொள்கைகளை கொண்டு வந்துள்ளது.
இதன்படி ஒரு ஊழியர் ஓராண்டுக்கு கட்டாயம் 225 நாட்கள் ஏதேனும் ஒரு ப்ராஜெக்டில் இணைந்து பணி புரிந்திருக்க வேண்டும் . இதனை அவர்கள் Billability days என அழைக்கிறார்கள். இதில் ஒரு நாள் குறைந்தால் கூட குறிப்பிட்ட அந்த ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிநீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் எந்தவித ப்ராஜெக்டிலும் சேர்க்கப்படாமல் இருக்கும் நாட்களை bench days என அழைப்பார்கள். அதாவது அவர் டிசிஎஸ் ஊழியர் தான் ஆனால் எந்த ப்ராஜெக்டிலும் சேராமல் இருப்பார். மனித வள மேலாண்மை குழு இவரை புது ப்ராஜெக்டில் சேர்ப்பது அல்லது பெஞ்சிலேயே வைப்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் ஓர் ஆண்டில் ஒரு ஊழியர் 35 நாட்கள் மட்டுமே பெஞ்ச் நாட்களாக கொண்டிருக்க முடியுமாம்.
இது டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. ஒரு ஊழியரை வேலைக்கு தேர்வு செய்து குறிப்பிட்ட ப்ராஜெக்ட்டில் நியமனம் செய்வது தான் நிறுவனத்தின் வேலை, எந்த ஊழியரும் வேலை இல்லாமல் சும்மா இருக்கலாம் என எண்ண மாட்டார்கள், எனவே ஒரு ஊழியர் பெஞ்ச் நாட்களில் இருந்தால் அது நிறுவனத்தின் தவறே அன்றி ஊழியரின் தவறாக எப்படி மாறும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுக்க இந்த பெஞ்ச் நாட்களை நிறுவனம் ஒரு காரணமாக கொள்ள போகிறது என்பதையே இந்த மாற்றங்கள் உணர்த்துகின்றன என சொல்லப்படுகிறது.
இதனிடையே அனைத்திந்திய ஐடி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசிஎஸ் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய கொள்கை ஊழியர்களுக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது என தெரிவித்து இருக்கிறது. ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்காக இப்படி ஒரு கொள்கையை கொண்டு வந்திருக்கிறது என அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் ஓர் ஆண்டில் பெஞ்ச் நாட்களாக 60 நாட்கள் இருந்தது அது 45 ஆக குறைக்கப்பட்டு தற்போது 35 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெஞ்ச் நாட்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய நிறுவனத்தின் தளத்தின் மூலம் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஆறு மணி நேரம் தன்னுடைய திறன்களை மேம்படுத்தி கொள்ளும் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும், அலுவலக ஆலோசனை கூட்டங்களுக்கு அழைத்தால் உடனே வர வேண்டும், அலுவலகம் வந்து பயிற்சி திட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications