இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் ஐடி சேவை துறையில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது. ஒருப்பக்கம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஐடி சேவையில் முதலீடு செய்வதை குறைந்து வரும் காரணத்தால் புதிய ஆர்டர்கள் கிடைப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதேவேளையில் ஏஐ சேவை மூலம் தொழில்நுட்ப பயண்பாட்டில் பெரும் மாற்றம் நடைபெற்று வருகிறது.
இதனால் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு குறைந்தது மட்டும் அல்லாமல் இளம் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வயது குறித்து புதிய தரவுகள் வெளியானது.

2025 மார்ச் நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் இந்திய பணியாளர்களில் வெறும் 47.7% பேர் மட்டுமே30 வயதுக்குக் கீழ் உள்ளதாகவும், இது 2022 நிதியாண்டில் 59% ஆக இருந்தது எனவும் தெரிய வந்துள்ளது. இதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 52% ஊழியர்கள் மட்டுமே 30 வயது அல்லது அதற்குக் கீழ் உள்ளனர், இது 2022-ல் 60% ஆக இருந்தது என தெரியவந்தது. இந்த நிலையில் டிசிஎஸ்-ன் அமெரிக்க வர்த்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் வட அமெரிக்காவின் பங்கு மட்டும் 50 சதவீதத்திற்கு மேல், ஆனால் அங்கு பணியாற்றும் 20%க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. ஐரோப்பாவில் இந்த எண்ணிக்கை 28% ஆக உள்ளது என லைவ்மின்ட் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஐடி துறை நிறுவனங்களில் இளம் தலைமுறையினர் அதிகம் இருப்பது வழக்கம், ஆனால் கடந்த 5 வருடத்தில் வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றம், தொழில்நுட்ப மாற்றம் என அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. இதனால் ஊழியர்கள் படையிலும் இதுப்போன்ற அதிர்ச்சியூட்டும் அளவுக்கு பிரச்சனை உருவெடுத்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களான TCS மற்றும் இன்ஃபோசிஸ், இளைஞர்களிடையே ஆர்வத்தை இழந்து வருகின்றன. இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 நிதியாண்டில் 44.6 லட்சம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்றது, இது 2022 நிதியாண்டை விட 24% குறைவு என்பது அடுத்த அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கையை தாண்டி விண்ணப்பம் எண்ணிக்கையிலேயே பெரும் சரிவு பதிவாகியுள்ளது. TCS இதேபோன்ற தரவுகளை வெளியிடவில்லை என்றாலும், இத்துறை நிறுவனங்கள் மத்தியில் இளைஞர்களின் ஆர்வக் குறைவதை பொதுவான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
இது நாள் வரையில் இந்திய ஐடி துறையின் லாபம், லாப வரம்பு, வெற்றி அனைத்தும் இளம் மற்றும் செலவு குறைந்த பணியாளர்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தது, ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. இதனால் இனி வரும் காலத்தில் லாப வரம்புகள் தொடர்ந்து குறையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே ஐடி துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் இதையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications