இஸ்ரேல்-ஈரான் மோதல் உலகப் பொருளாதாரத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ஐடி துறையும் சவால்களை எதிர்கொள்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவின் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கல் இஸ்ரேல் நாட்டில் பல்வேறு விதிமான வர்த்தகத்தை செய்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் போரின் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இயக்குநர் கேகி கேகி மிஸ்ட்ரி, ஜூன் 19ஆம் தேதி நடந்த இந்நிறுவனத்தின் 30வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு டிசிஎஸ்-ன் நிலைமை குறித்து முக்கியமான விபரத்தை இந்நிறுவன ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கு அறிவித்தார்.

ஈரான் மற்றும் இஸ்ரேலில் டிசிஎஸ்-ன் வர்த்தகம் மிகக் குறைந்த அளவே இயங்குவதால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார் கேகி மிஸ்திரி. இதே வேளையில், உலகளாவிய மோதல்கள் மற்றும் பொருளாதார நிச்சயமின்மை ஆகியவற்றின் மூலம் சந்தையில் முதலீட்டு அளவில் தடுமாற்றம் ஏற்படுத்துவதாகவும், இதனால் வர்த்தகம் பாதிக்க கூடும் என கூறினார்.
இஸ்ரேல்-ஈரான் போர்: ஜூன் 2025 முதல் தீவிரமடைந்த இஸ்ரேல்-ஈரான் மத்தியிலான போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது. இதை தொடர்ந்து ரெட் சீ பாதை மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தக பாதைகள் தடைபட்டு, கப்பல் போக்குவரத்து செலவு 40-50% உயர்ந்துள்ளது. இதனால், சர்வதேச பங்குச்சந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், ஐடி சேவைக்காக நிறுழனங்கள் தங்களுடைய பட்ஜெட்டை தொழில்நுட்ப சேவைகாக செலவு செய்வதில் எச்சரிக்கையாக உள்ளனர். இஸ்ரேலில் செயல்படும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா நிறுவனங்கள் நேரடி பாதிப்பு குறைவாக இருந்தாலும், மறைமுக பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
என். சந்திரசேகரன் வருகை மிஸ்: பொதுவாக டிசிஎஸ் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர் என்.சந்திரசேகரன் தான் கலந்துக்கொண்டு பேசுவார். ஆனால் தற்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சுமார் 270 பேர் உயிரிழிந்த காரணமாக, விமானத்தின் இன்சூரன்ஸ் மற்றும் இதை சுற்றிய பணிகள் அதிகமாக இருந்த நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
டிசிஎஸ் எதிர்கொள்ளும் பிரச்சனை: இந்த நிலையில் தான் கேகிமிஸ்ட்ரி, ஈரான்-இஸ்ரேல் பிரச்சினைகளில் டிசிஎஸ் பாதிப்பு மிகக் குறைவு என்று உறுதியளித்தார். இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகள் மற்றும் உலகளாவிய பதற்றங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஐடி சேவைக்காக செலவு செலவு செய்வதை கட்டுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications