இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி சேவை துறை அடுத்த சில மாதங்களுக்கு மந்தமாக வர்த்தக சூழ்நிலையிலையை தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அக்சென்சர் நிறுவனத்தின் வர்த்தக கணிப்புகள் மூலம் புரிந்துக்கொள்ள முடிகிறது.
2023 ஆம் ஆண்டின் துவங்கத்தில் அமெரிக்க வங்கிகள் திவாலான நிலையில் இருந்து இந்திய ஐடி சேவை துறை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனாலும் நிர்வாக மாற்றம், புதிதாக பெறப்பட்ட வர்த்தகம், வருவாய் மற்றும் லாபத்தில் உயர்வு ஆகியவை டிசிஎஸ் பங்குகள் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து அக்டோபர் 6 ஆம் தேதி வரையில் சுமார் 11.03 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை அதன் நிர்வாக குழு அக்டோபர் 11 அன்று நடக்கும் கூட்டத்தில் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களிடம் இருக்கும் பங்குகளை திரும்பப் பெறும் பைபேக் திட்டத்தை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை அதே நாளில் வெளியிட உள்ளது.
இதே வேளையில் சந்தை ஆய்வாளர்கள் பெருமளவில் டிசிஎஸ் நிறுவனம் விற்பனையில் இரட்டை இலக்க உயர்வையும், வருடாந்திர அடிப்படையில் லாபத்தில் 9 முதல் 11 சதவிகிதம் வரையிலான உயர்வை அறிவிக்கும் என்று கணித்துள்ளனர். இதேபோல் ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஐடி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை கொடுத்துள்ள நிலையில் செப்டம்பர் காலாண்டில் இதன் மார்ஜின் அளவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனம் கணிக்கப்பட்ட அளவீட்டை எட்டினால் கட்டாயம் பங்குச்சந்தையில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். இதோடு பைபேக் திட்டங்களுக்கும் இருக்கும் காரணத்தால் டிசிஎஸ் பங்குகள் உயர்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் 2022 இல் 4,00,00,000 பங்குகளை மொத்தமாக ரூ.18,000 கோடி தொகைக்கு பைபேக் செய்வதாக அறிவித்தது. இது டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி பங்குகளில் சுமார் 1.08 சதவீதமாகும்.
டிசிஎஸ் 2021ல் ரூ.16,000 கோடி பங்குகளை திரும்பப் பெறுதல், 2018ல் ரூ.16,000 கோடி மற்றும் 2017ல் ரூ.16,000 கோடி பங்குகளை சந்தையில் பைபேக் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications