ஆபீஸ் வருபவர்களுக்கு அதிக மார்க்.. அப்ரைசலில் கை வைத்த TCS.. ஊழியர்களுக்கு செக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நாட்களுக்கான புள்ளிகளை சேர்க்கும் வகையில் அதன் மதிப்பீட்டு முறையை (appraisal system) மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றும் குழும தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில், உங்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கீழே உள்ள அலுவலகத்திற்கு திரும்புவதற்கான இலக்கை உடனடியாக குழு உறுப்பினர்களுக்கு, உடனடியாக தெரிவியுங்கள் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

8 இல்ல 11 டாலர்.. ட்விட்டர் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் உயர்வு.. யாருக்கு பாதிப்பு..?!8 இல்ல 11 டாலர்.. ட்விட்டர் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் உயர்வு.. யாருக்கு பாதிப்பு..?!

3 நாட்கள் அலுவலகம் வரணும்

3 நாட்கள் அலுவலகம் வரணும்

இந்த மெயில் மேற்கோண்டு அருகில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திற்கு, வாரத்தில் சராசரியாக மூன்று நாட்கள் ஊழியர்கள் வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், செயல் இயக்குனருமான என் கணபதி சுப்பிரமணியம், நிறுவனம் முன்னதாக 25/25/25 மாதிரியினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் வந்த வினை

கொரோனாவால் வந்த வினை

கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்து பணியாற்ற கூறிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, கொரோனாவுக்கு பிறகு ஹைபிரிட் முறையிலும், சில நிறுவனங்கள் படிப்படியாக அலுவலகத்திற்கு ஊழியர்களை அழைத்தும் வருகின்றன. அந்த வகையில் டிசிஎஸ் அதன் ஊழியர்களுக்கு கொடுத்த அறிவிப்பு 25/25/25 மாதிரியினை 2025-க்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியது.

25/25/25 மாதிரி

25/25/25 மாதிரி

அதன் படி மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும். அதேபோல 25% பணி நேரத்தை மட்டுமே உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் செலவிட வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் எனபது தான் இதன் முழு திட்டம். டிசிஎஸ்-ன் 25/25/25 மாதிரி பல பதில்களை பெற்றது.

இது சரிபட்டு வராது?

இது சரிபட்டு வராது?

இதற்கிடையில் அலுவகத்தில் இருந்து பணி புரிவதற்கான புள்ளிகளை, அப்ரைசல் சிஸ்டமில் சேர்ப்பது ஒரு பணியாளரின் செயல்திறனை சரியாக மதிப்பிடுவதற்கு உதவாது என்ற கருத்தினையும் CIEL HR சேவைகளின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித்யா நாரயணன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

முடிவின் அடிப்படையில் தீர்மானிக்கனும்

முடிவின் அடிப்படையில் தீர்மானிக்கனும்

ஒரு ஊழியரின் செயல்திறன் என்பது அவர்கள் உருவாக்கும் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அளவிடப்பட வேண்டும். அவர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிகின்றார்களா அல்லது தொலைதூரத்தில் இருந்து பணிபுரிகின்றனரா? என்பதை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.

இலக்கு எட்டப்படவில்லை எனில்?

இலக்கு எட்டப்படவில்லை எனில்?

அலுவகத்தில் இருந்து பணிபுரியும் பணியாளர்களும் அவர்கள் இலக்கை அடையாமல் இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் இருந்து பணி புரிந்ததற்காக அவர்களுக்கு சாதகமான அறிவிப்பினை கொடுப்பது சரியானதாக இருக்காது. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவாது. நிறுவனத்தின் செயல்திறனை ஊக்குவிக்க உதவாது என்றும் கூறுகிறார்.

இது தான் காரணமா?

இது தான் காரணமா?

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை விரும்பாத நிலையில், அவர்களை ஊக்குவிக்க, அலுவகத்திற்கு வரவைக்க நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். இது நிறுவனம் ஊழியர்கள் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க உதவலாம்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

ஒரு புறம் 25/25/25 திட்டட்தினை அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறி வரும் நிலையில், மறுபுறம் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளதும் ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். நிறுவனம் கூறுவது 25/25/25 மாடலை கடைபிடித்தால், அதிக நாட்கள் நிறுவனத்தில் வந்து பணிபுரிய முடியாது. அப்போது எதிர்கால நலனில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது. இது குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டால் மட்டுமே உண்மை நிலவரம் என்ன என்பது முழுமையாக தெரியவரும் எனலாம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs டிசிஎஸ்
English summary

TCS offers points to make employees work from office

TCS offers points to make employees work from office
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X