இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்த நாளில் இருந்து சைலெண்டாக பல வேலைகளை செய்து வருகிறது. சமீபத்தில் வெளியான தகவலில் டிசிஎஸ் 50000 முதல் 80000 ஊழியர்கள் வரையில் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது, ஆனால் இதை முழுமையாக டிசிஎஸ் மறுத்துள்ளது.
இதேவேளையில் டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து பிரிவுகளிலும், அனைத்து அணிகளில் இருந்தும் fluidity list கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் பணிநீக்கத்தை எதிர்த்து பல ஊழியர்கள் அமைப்புகள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறது.

இந்த நிலையில் டிசிஎஸ் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்ற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, டிசிஎஸ் நிறுவனம் தன்னை மிகவும் வலிமையாகவும், எதிர்காலத்திற்கு தயாராக்காவும் ஊழியர்கள் படையில் மாற்றத்தை செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆட்டோமேஷனின் அதிகரிப்பு மற்றும் வாடிக்கையாளர் தேவைகளில் ஏற்பட்ட மாற்றங்களே இத்தகைய முடிவுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?
டிசிஎஸ்-இன் இந்த மறுசீரமைப்பு பணிகளில் பணிநீக்கம் முக்கியமான அங்கம் வகிக்கிறது. தற்போதைய தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்தாத அல்லது நிறுவனத்திற்கு தேவையற்ற திறன்களைக் கொண்ட ஊழியர்களை தான் அதிகம் பாதிக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படும் ஊழியர்கள் மூன்று மாத நோட்டீஸ் பிரீயட் கால ஊதியத்துடன், அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான இழப்பீடு அதாவது severance pay பெறுவார்கள்.
மேலும் பணிநீக்கம் செய்யப்படும் டெக் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு 6 மாத ஊதியமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 கோடி பணம் சம்பாதிக்க எளிய வழி Mutual Fund
பென்ச் ஊழியர்களுக்கு என்ன?
கடந்த 8 மாதங்களுக்கு மேல் பணி ஒதுக்கப்படாமல் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களுக்கு, மூன்று மாத நோட்டீஸ் பிரீயட் ஊதியத்துடன் சிறிய அளவிலான இழப்பீடு வழங்கப்பட திட்டமிட்டுள்ள டிசிஎஸ் நிர்வாகம்.
இதுவே 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சுமார் 1.5 ஆண்டு severance pay கிடைக்கும் என்றும் தெரிகிறது.
இதேபோல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கு உதவும் வகையில், டிசிஎஸ் அவுட்பிளேஸ்மென்ட் சர்வீஸஸ் வழங்குகிறது, இந்த சேவைக்கான 3 மாதங்களுக்கு ஏஜென்சி கட்டணங்களை டிசிஎஸ் நிர்வாகமே செலுத்துகிறது.
முன்கூட்டிய ஓய்வு பெற வாய்ப்பு
ஓய்வு பெறும் வயதை நெருங்கிய ஊழியர்களுக்கு, டிசிஎஸ் முன்கூட்டிய விருப்ப ஓய்வு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்கள், காப்பீடு உள்ளிட்ட அனைத்து ஓய்வு பலன்களுடன், 6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான severance pay பெறலாம் என தெரிகிறது.
இந்தத் திட்டம், நீண்டகால ஊழியர்களுக்கு மரியாதையுடன் வெளியேறுவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications