டாடா குழுமத்திற்கு சொந்தமான ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், ஓமன் நாட்டில் தங்களுடைய சொந்த அலுவலகத்தை திறந்துள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அலுவலகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளிலும் டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான தலைவராக செயல்பட்டு வரக்கூடிய சுமந்தாராய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர் ஓமன் நாட்டில் நாங்கள் புதிய அலுவலகத்தை தொடங்கி இருக்கிறோம் ,சில மாதங்களுக்கு முன்பே இந்த அலுவலகம் திறக்கப்பட்டு விட்டது ஆனால் முறையான தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். ஓமன் நாட்டிற்கான இந்திய தூதர் இந்த அலுவலகத்தை திறந்து வைப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஓமனில் இந்தியாவை சேர்ந்த பலரும் வேலை செய்கின்றனர். டிசிஎஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்கள் வழியாக ஓமன் நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வந்தது ஆனால் இந்த புது அலுவலகத்தின் மூலம் இனி நேரடியாக ஓமனை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிவோம் என அவர் கூறியுள்ளார் .
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இது தவிர சவுதி அரேபியா ,ஓமன் ,எகிப்து , தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பணியில் இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
சவுதியின் ரியாத் நகரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் 3000 பேர் பணிபுரிவதாக டிசிஎஸ் நிறுவனம் கூறுகிறது. இதில் 700 பேர் சவுதி நாட்டை சேர்ந்த பெண்கள் என சுமந்தா ராய் தெரிவிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண பிபிஓ சென்டராக தொடங்கப்பட்ட தங்களுடைய ரியாத் மையம் தற்போது பல்வேறு சேவைகளுக்கான மையமாக மாறி இருக்கிறது என கூறியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சவுதி அரேபியாவில் நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருந்து தற்போது நிலைமை மாறி இருக்கிறது சுமார் 700 பெண்கள் எங்கள் நிறுவனத்தில் பணி புரிகின்றனர் என பெருமையாக கூறியுள்ளார்.
சவுதியில் ரியாத் மட்டுமில்லாமல் தம்மம் பகுதியிலும் தங்கள் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றும் ஓமனில் தொடங்கப்பட்டுள்ள அலுவலகம் தங்களுக்கு புதிய வாய்ப்புகளை பெற்று தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications