இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடமிருந்து (ஐடிஏடி) சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. ITAT மும்பை பெஞ்ச் உத்தரவின் மூலம் , டிசிஎஸ் நிறுவனம் டாடா பிராண்ட் பெயர் மற்றும் லோகோ-வை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கிறது.
இது மட்டும் அல்லாமல் டாடா பிராண்ட் பெயர் மற்றும் லோகோ-வை பயன்படுத்த டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு TCS செலுத்த வேண்டிய தொகையையும் ITAT மும்பை பெஞ்ச் உத்தரவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் சொந்த நிறுவனமாக இருந்தாலும், இதன் பிராண்ட் பெயரை பயன்படுத்த தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அனுமதி பெற்று, அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இதன் படி டிசிஎஸ் உட்பட அனைத்து டாடா குழும நிறுவனங்களும் டாடா பெயர் மற்றும் லோகோ-வை பயன்படுத்தியிருந்தால் அதற்கான தொகையை செலுத்த வேண்டியது கட்டாயம்.
இதன் பிடி டாடா பெயர் மற்றும் லோகோவுக்கான உரிமையை தக்கவைக்க டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு டிசிஎஸ் சுமார் 77 லட்சம் ரூபாயை செலுத்தியது என டைம்ஸ்நவ் தெரிவித்துள்ளது. இந்த கட்டணம் வணிக விலக்காக (business deduction) டிசிஎஸ் தனது நிதி கணக்கில் வகைப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் TCS நிறுவனம் வரி சுமை கொண்ட லாபத்தைக் குறைத்து அதன் வருமான வரிப் பொறுப்பைக் குறைக்கிறது, இந்த 77 லட்சம் ரூபாயை செலவாக கணக்கு காட்ட முடியும் என்பதே இதன் பொருள். இந்த ஏற்பாடு, டாடா குழும நிறுவனங்களிடையே உள்ள பிற ஒப்பந்தங்களை போன்றது,
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டாடா பிராண்டின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு வருடாந்திர கட்டணத்தை அதன் கிளை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் லோகோ-வை சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் பயன்படுத்துவதை தடுக்க முடியும்.
டாடா கெமிக்கல்ஸ் போன்ற பிற டாடா குழும நிறுவனங்களும் இதுபோன்ற பணம் செலுத்துவது தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications