இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எப்போதும் இல்லாமல் புதிய வர்த்தகத்தில் இறங்கப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு டிசிஎஸ் ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் அதன் முதலீட்டாளர்களும் பெரும் அதிர்ச்சி கொடுத்தது. ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் டிசிஎஸ் வரலாற்றில் முதல் முறையாக டேட்டா சென்டர் துறையில் பெரிய அளவில் காலடி எடுத்து வைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக புதிய கூட்டணியில் புதிய நிறுவனத்தை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசிஎஸ் தனது வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் கடந்த மாதம் காலாண்டு முடிவுகள் வெளியிடும்போது அறிவிக்கப்பட்ட இந்தத் டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தில், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் 1 முதல் 1.2 கிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக மொத்தம் 6.5 முதல் 7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
TPG உடன் புதிய கூட்டு நிறுவனம்
இந்தப் பெரிய திட்டத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் டிசிஎஸ், அமெரிக்காவின் பிரபல தனியார் முதலீட்டு நிறுவனமான டிபிஜி (TPG) உடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்க உள்ளது. ஹைப்பர்வால்ட் ஏஐ டேட்டா சென்டர் லிமிடெட் (HyperVault AI Data Centre Ltd) என்ற பெயரில் அக்டோபர் இறுதியில் டிசிஎஸ் கீழ் துணை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
இந்த துணை நிறுவனத்தில் டிசிஎஸ் 51 சதவீத பங்குகளையும் டிபிஜி 49 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும். இரு நிறுவனங்களும் சேர்ந்து சுமார் 2 பில்லியன் டாலர் பங்கு முதலீட்டை செய்யும். மீதமுள்ள 4.5 முதல் 5 பில்லியன் டாலர் கடன் வழியாக படிப்படியாக திரட்டப்படும் என்று தெரிகிறது.
உலகின் மிகப்பெரிய ஏஐ தொழில்நுட்ப சேவை நிறுவனமாக மாறும் இலக்குடன் டிசிஎஸ் நிர்வாகம் இந்த முதலீட்டை பார்க்கிறது. இதுவரை குறைவான செலவு, ஊழியர்கள் அடிப்படையிலான வளர்ச்சி மாதிரியை பின்பற்றி வந்த டிசிஎஸ், முதல் முறையாக புதிய வர்த்தகத்தில் இறங்கியுள்ளது, இதற்காக வெளியில் இருந்து பங்கு முதலீட்டையும், கடனையும் பெறுகிறது டிசிஎஸ்.
இந்தியாவில் டேட்டா லோக்கலைசேஷன் சட்டங்கள் டிசிஎஸ் வர்த்தகத்திற்கு சாதகமாக இருக்கும் இதேவேளையில், ஏஐ, கிளவுட் சேவைகளின் விரிவாக்கம் உள்ளூர் டேட்டா சென்டர்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது.
டிபிஜி நிறுவனம் ஏற்கனவே டாடா குழுமத்தில் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் வாகனப் பிரிவு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் டிசிஎஸ் உடனான இந்தப் புதிய கூட்டணி 3வது இணைப்பாகும். மேலும் இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையிலான மூன்றாவது பெரிய ஒப்பந்தமாக அமையும். இந்த ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டிசிஎஸ் தரப்பிலும், டிபிஜி தரப்பில் இருந்தும் இது தொடர்பாக எவ்விதமான அறிவிப்பும் வரவில்லை.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications