2025ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த அளவிலான ஊதிய உயர்வையே பெறுவார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ் 2025 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பை மார்ச் மாதத்தில் வெளியிட்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்க்கும்போது டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 4 - 8% மட்டுமே ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தெரிகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் புதிய ஊதியத்தை பெற தொடங்குவார்கள். பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை குறைத்து இருக்கின்றன. முன்னதாக இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பான கடிதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனமும் 5- 8 சதவீதம் வரை மட்டுமே ஊதியத்தை உயர்த்தி வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டுகளில் இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வையே வழங்கவில்லை. சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்போசிஸ் நிறுவனம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் இருந்தே ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை கணிசமான அளவு குறைத்துக் கொண்டே வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்னர் இரண்டு இலக்கங்களில் ஊதிய உயர்வு வழங்கிய ஐடி நிறுவனங்கள் தற்போது அதனை ஒற்றை இலக்கமாக குறைத்து இருக்கின்றன. டிசிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஊழியர்கள் கட்டாயம் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வந்து தான் பணி புரிய வேண்டும் என அறிவித்திருந்தது. 2024 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை ஏற்று அலுவலகத்திற்கு திரும்பிய ஊழியர்களுக்கு அவர்களின் செயல் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட இருக்கிறது.
ஆஃப்சைட் ஊழியர்களுக்கு 5 - 8 சதவீதம் வரையிலும் ஆன்சைட் ஊழியர்கள் 2 - 4 சதவீதம் வரையிலும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 12- 15 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்படலாம். 2022ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு 10.5 சதவீதத்திலிருந்து ஊதிய உயர்வு வழங்கிய டிசிஎஸ் நிறுவனம் பின்னர் அதனை படிப்படியாக குறைத்துவிட்டது. டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் தற்போது பணிபுரிகின்றனர்.
story written:devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications