இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும் பீதியில் இருக்கும் வேளையில், டிசிஎஸ் - இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து ஏஐ நிறுவனங்களுடன் கூட்டணி வைக்க துவங்கியது. அதிலும் முக்கியமாக டிசிஎஸ்-ன் புதிய வர்த்தக பிரிவான டேட்டா சென்டருக்கு முதல் வாடிக்கையாளரை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளையில் சில நாட்களுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் டிசிஎஸ்-ன் ஏஐ துறை வளர்ச்சி மற்றும் வணிக உத்தியில் நேரடியாகவும் தீவிரமாகவும் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த ஒரு வாரத்தில் புடிச்சாலும் புளியங்கொம்பாக பிடிக்கணும் என்பது போல் பெரிய வாடிக்கையாளரை டிசிஎஸ் பிடித்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) டேட்டா சென்டர் வணிகத்தில் இறக்கியது மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. காலம் காலமாக ஐடி சேவையை மட்டுமே செய்து வரும் டிசிஎஸ் தற்போது ஏஐ, கிளவுட் சேவை துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் ஏஐ தொழில்நுட்பத்தை இயக்கும் டேட்டா சென்டரை உருவாக்க முடிவு செய்து இதற்காக தனி கூட்டணி, தனி நிறுவனத்தை உருவாக்கியது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் டிசிஎஸ்-ன் டேட்டா சென்டர் சேவையின் முதல் வாடிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் 100 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர் சேவையை ஓபன்ஏஐ பெற உள்ளது. இது உலகளாவிய ஏஐ உள்கட்டமைப்பு திட்டமான Stargate-இன் ஒரு பகுதியாகும்.
Stargate திட்டம்
அமெரிக்க டெக் துறையை புரட்டிப்போட்ட Stargate திட்டம் என்பது 500 பில்லியன் டாலர் மதிப்புடைய பல ஆண்டு திட்டமாகும். இந்த திட்டம் மூலம் அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஏஐ துறையில் அனைத்து மட்டத்திலும் சிறந்து விளங்குவதற்காக டிரம்ப் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஸ்டார்கேட் திட்டம் மூலம் ஏஐ மாடல்களை பயிற்றுவிப்பதற்கும் (training), செயல்படுத்துவதற்கும் (inference) டேட்டா சென்டர்களை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை அமெரிக்க அரசு ஆதரிப்பதை தாண்டி ஏஐ உலகின் பெரிய நிறுவனங்கள், பல்வேறு முதலீட்டாளர்களால் ஆதரிக்கப்படும் ஒரு முக்கிய திட்டமாகும். இத்திட்டத்தில் டிசிஎஸ் முக்கிய பங்கு வகிக்க உள்ளது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
டிசிஎஸ் டேட்டா சென்டர் கூட்டணி
டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஐடி சேவை துறையை தாண்டி டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தில் இறங்குவதாக அறிவித்தது. இந்த திட்டத்தின் படி அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் 1 முதல் 1.2 கிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக மொத்தம் 6.5 முதல் 7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பெரிய திட்டத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் டிசிஎஸ், அமெரிக்காவின் பிரபல தனியார் முதலீட்டு நிறுவனமான டிபிஜி (TPG) உடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்க உள்ளது. ஹைப்பர்வால்ட் ஏஐ டேட்டா சென்டர் லிமிடெட் (HyperVault AI Data Centre Ltd) என்ற பெயரில் அக்டோபர் இறுதியில் டிசிஎஸ் கீழ் துணை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
இந்த துணை நிறுவனத்தில் டிசிஎஸ் 51 சதவீத பங்குகளையும் டிபிஜி 49 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும். இரு நிறுவனங்களும் சேர்ந்து சுமார் 2 பில்லியன் டாலர் பங்கு முதலீட்டை செய்யும். மீதமுள்ள 4.5 முதல் 5 பில்லியன் டாலர் கடன் வழியாக படிப்படியாக திரட்டப்படும் என கூறப்படுகிறது.
இந்த மாபெரும் திட்டத்திற்கு தான் தற்போது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் முதல் வாடிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பு முதலீடு பெருமளவு அதிகரித்துள்ளது. கூகுள், அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற உலக நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் அளவில் டேட்டா சென்டர் முதலீடு செய்து வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ், அதானி குரூப் ஆகியவையும் இதில் இணைந்துள்ளன. ஓபன்ஏஐ உடனான டிசிஎஸ் ஒப்பந்தம் இந்தியாவை உலக ஏஐ உள்கட்டமைப்பு மையமாக மாற்றும் முயற்சியில் முக்கிய படியாக உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications