ஐடி பிரெஷ்ஷர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. டிசிஎஸ் பிரம்மாண்ட அறிவிப்பு..!

கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் தொடர்ந்து பணியமர்த்தல் ஆனது அதிகரித்து வருகின்றது.

சொல்லப்போனால் இதுவரை இல்லாத அளவு ஐடி துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது எனலாம்.

குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும், தொடர்ந்து பணியமர்த்தல் குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இரண்டாவது காலாண்டில் நல்ல வளர்ச்சி

இரண்டாவது காலாண்டில் நல்ல வளர்ச்சி

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது குறித்து ஏற்கனவே பல பதிவுகளில் நாம் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது டிசிஎஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை பற்றி தான். டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் வருவாயானது நல்ல வளர்ச்சியை கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்

கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்

எனினும் இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், டிசிஎஸ் நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் மிக மோசமாக கவலையளிக்கும் விதமாக 11.2% ஆக அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கொண்டு பணியமர்த்தலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலைப் போரினை உருவாக்கலாம்

விலைப் போரினை உருவாக்கலாம்

இது திறமைக்கான ஒரு விலைப் போரினை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக கடந்த சில காலாண்டுகளாகவே, ஐடி துறையானது நல்ல வளர்ச்சியை கண்டு வருகின்றது. எனினும் அட்ரிசன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தான் ஐடி ஊழியர்களுக்கு, முன்னணி நிறுவனங்கள் நல்ல சம்பளத்தில் வேலை கொடுக்க தயாராக உள்ளன.

வாய்ப்புகள் அதிகம்

வாய்ப்புகள் அதிகம்

தேவை அதிகம் உள்ள நிலையில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும், இரண்டு மூன்று வேலைகள் ஒரே நேரத்தில் கிடைக்கும் நிலையில், சம்பள விகிதமும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்கள் சம்பளம் அதிகம் கிடைக்கும் நிறுவனங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் விகிதமும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தேவை அதிகம்

தேவை அதிகம்

இது ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. ஐடி துறையினை பொருத்த வரையில் டிஜிட்டல் தேவையானது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்த நிலையே தற்போதும் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் ஐடி துறையினருக்கு தேவையானது தொடர்ந்து மிக அதிகமாகவே உள்ளது.

ஊழியர்களுக்கான பற்றாக்குறை

ஊழியர்களுக்கான பற்றாக்குறை

இதற்கிடையில் தான் பல நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களை போட்டு வருகின்றனர். அதே சமயம் அட்ரிஷன் விகிதம் அதிகரித்து வருகின்றது, தேவையும் அதிகம் உள்ளது. ஆனால் இன்று வரையில் ஊழியர்களுக்கான பற்றாக்குறையே ஐடி நிறுவனங்களில் நிலவி வருகிறது.

35,000 பேருக்கு வாய்ப்பு

35,000 பேருக்கு வாய்ப்பு

இதற்கிடையில் தான் முன்னணி ஐடி நிறுவனங்கள், தற்போது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் போதிய பயிற்சி அளித்து, பிரெஷ்ஷர்களை பணியமர்த்தல் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் 35,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

வரலாறு காணாத அளவு பணியமர்த்தல்

வரலாறு காணாத அளவு பணியமர்த்தல்

இதே நடப்பு நிதியாண்டில் 78,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக, முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது வரலாறு காணாத அளவு பணியமர்த்தல் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு ஐடி துறையில் தேவை அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகிறது.

இது நல்ல வாய்ப்பு

இது நல்ல வாய்ப்பு

இதற்கிடையில் பணியமர்த்தும் தொடர்ந்து அதிகரித்து வரும் என்ற நிலையே நிலவுகிறது. ஐடி துறையில் நிலவிவரும் பற்றாக்குறைக்கு மத்தியில், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதமாக ஊழியர்களுக்கு தகுந்த பயிற்சியும் அளிக்கப்பட்டு, அவர்கள் பணியமர்த்தப்படுவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது வேலை தேடிக்கொண்டிருக்கும் ஐடி ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்பு எனலாம்.

டிசம்பரில் அலுவலகம் வரலாம்

டிசம்பரில் அலுவலகம் வரலாம்

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாகவே, கொரோனாவின் காரணமாக ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டிசம்பர் மாத இறுதியிலிருந்து அலுவலகத்துக்கு திரும்பலாம் என்று டிசிஎஸ் அறிவித்துள்ளது. டிசிஎஸ் ஊழியர்களின் 97% பேர் தங்களது கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும், அதிகபட்சம் அவர்கள் முதல் தடுப்பூசியை ஆவது போட்டுக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

ஹைபிரிட் மாடல் பணி

ஹைபிரிட் மாடல் பணி

தற்போது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வரும் நிலையில், ஹைபிரிட் மாடல் பணியை நடைமுறைப்படுத்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றது. இந்த முறையை டிசிஎஸ் நிறுவனமும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகின்றது. தற்போது 97 - 98% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் நிலையில், 80 - 85% பேர் விரைவில் அலுவலகத்திற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 60% வரை ஹைபிரிட் மாடல் இன் பணிபுரிய அனுமதி கொடுக்கலாம் என்றும் தெரிகிறது.

டெக் மகேந்திராவின் அறிவிப்பு

டெக் மகேந்திராவின் அறிவிப்பு

இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டெக் மகேந்திரா https://tamil.goodreturns.in/news/tech-mahindra-plans-to-hire-3-times-more-freshers-in-current-year-024491.html நிறுவனமும் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் 3 மடங்கிற்கும் அதிகமான பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது. இதன் மூலம் திறன் வாய்ந்த ஊழியர்களை தங்களது ஊழியர் தொகுப்பில் சேர்ப்பதை இலக்காக கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+