40,000 பேருக்கு வேலை நிச்சயம்.. டிசிஎஸ் வெளியிட்ட டக்கரான அறிவிப்பு..!

டிசிஎஸ் நிறுவனம் 40,000 ஃபிரஷர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நடப்பு ஆண்டில் பணிக்கு அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவளத்துறை அதிகாரி மிலிந்த் லக்காட் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஐடி பிரிவில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 2024 - 2025 ஆம் நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையில் 5 ஆயிரம் பேரை குறைத்து இருக்கிறது.

40,000 பேருக்கு வேலை நிச்சயம்.. டிசிஎஸ் வெளியிட்ட டக்கரான அறிவிப்பு..!

இந்த நிலையில் புதிதாக 40,000 பேரை ஃபிரஷர்களாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்ய இருக்கிறோம் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசினஸ் ஸ்டாண்டர்டு தளத்துக்கு பேட்டி அளித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி லக்காட் எந்த ஒரு காலாண்டிலும் தங்களுடைய நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருந்ததில்லை எனக் கூறியுள்ளார். ஊழியர்களின் எண்ணிக்கை குறைவது தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியிலோ அல்லது புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டுமென்ற இலக்கிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என கூறுகிறார்.

ஒரு ஆண்டிற்கு ஃபிரஷர்களாக எவ்வளவு பேரை பணிக்கு அமர்த்த வேண்டும் என்பது குறித்து ஆண்டின் தொடக்கத்திலேயே நாங்கள் முடிவு செய்து விடுவோம் அதன் அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுவோம் என கூறியுள்ளார்.

ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தங்கள் நிறுவனத்தின் செயல் திறனில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் தங்களுடைய நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக நிறுவனத்தை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சியும் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தில் ட்ரெய்னி நிலையில் பணிக்கு வருபவர்களுக்கு கூட செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய அளவிலான லாங்குவேஜ் மாடல்கள் தொடர்பான அடிப்படை புரிதல் இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலை வாய்ப்பு பறிபோகாது எனக் கூறியுள்ள அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்முடைய வேலையை இன்னும் மேம்படுத்தப் போகிறது என்கிறார். செயற்கை நுண்ணறிவு மாடல்களுக்கு பயிற்சி தருவது, அவற்றை இன்னும் மேம்படுத்துவது ,அவற்றை திறம்பட செயல்பட வைப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு மனிதர்கள் தான் தேவைப்படுவார்கள் என கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+