டிசிஎஸ் நிறுவனத்தின் ரூ.16000 கோடி பைபேக் திட்டம்.. உங்கள் பங்குகளை விற்க போறீங்களா?

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பை பேக் திட்டத்தினை, வரும் டிசம்பர் 18 முதல் தொடங்க உள்ளது.

டிசிஎஸ் அதன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர ஏற்கனவே முடிவு செய்த நிலையில், 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மீண்டும் வாங்க முடிவெடுத்திருந்தது.

இதற்காக இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் ஒரு பங்குக்கு 3000 ரூபாய் என்ற வகையில் 5.33,33,333 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கத் தீர்மானிக்கப்பட்டது.

டாடா சன்ஸ் வசம் எவ்வளவு பங்கு?

டாடா சன்ஸ் வசம் எவ்வளவு பங்கு?

இதில் டி.சிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான டாடா சன்ஸ் நிறுவனம், இந்த பை பேக் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிரது. ஏனெனில் இந்த நிறுவனம் டிசிஎஸ்-சில் 72 சதவீத பங்குககளைக் கொண்டுள்ளது. இந்த பங்குகளை டிசிஎஸ்க்கு விற்பதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் 11,500 கோடி ரூபாயினை பெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றே கடைசி நாள்

இன்றே கடைசி நாள்

அதோடு டிசிஎஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு 12 ரூபாய் ஈவுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆக இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு 324 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும் பங்குதாரர்கள் இந்த பங்கினை விற்க டிசம்பர் 15க்கு முன்பு விண்ணபிக்க வேண்டும். அதாவது இன்றே கடைசி நாளாகும். அப்படி விண்ணபிப்பவர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.

இது தான் கடைசி தேதி

இது தான் கடைசி தேதி

வரும் டிசம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள இந்த பைபேக் திட்டம், ஜனவரி 1, 2021 வரையில் அமலில் இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காக தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்த நிலையில், இந்த பைபேக் திட்டத்தினை அறிவித்துள்ளது.

லாபம் தான்

லாபம் தான்

முதல் கட்டமாக டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக அமையும் என்றும் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டத்தினால், பங்குதாரர்களுகு நல்ல லாபமே. இந்நிலையில் பிஎஸ்இ-யில் இதன் பங்கு விலையானது கிட்டதட்ட 1% சரிந்து, 2,776.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

செம ஏற்றத்தில் டிசிஎஸ்

செம ஏற்றத்தில் டிசிஎஸ்

ஆக நீங்கள் இந்த பைபேக் திட்டத்தில் உங்களது பங்குகளை விற்க தயாராக உள்ளீர்களா? டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த மார்ச் மாத குறைந்த விலையில் இருந்து, ஒப்பிடும்போது கிட்டதட்ட 85 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இது காலத்தில் எஸ் &பி பிஎஸ்இ சென்செக்ஸ் 80 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+