TCS ஊழியர்களுக்கு 2 சர்ப்ரைஸ்.. இதை விட என்ன சார் வேணும்..!!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) தனது காலாண்டு முடிவுகள் வெளியிடும் போது இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு குறித்து நிர்வாகம் முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், டிசிஎஸ்-ன் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பெரும் சோகத்திலும், அதிர்ப்தியிலும் மூழ்கினர்.

இந்த நிலையில் டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவதை முன்னுரிமையாகக் கருதுவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான் சமீர் செக்ஸாரியா கூறுகையில், "தற்போது என்னுடைய முக்கியமான கவனமே ஊதிய உயர்வை மீண்டும் தொடங்குவதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

TCS ஊழியர்களுக்கு 2 சர்ப்ரைஸ்.. இதை விட என்ன சார் வேணும்..!!

ஆனால் எப்போது இந்த சம்பள உயர்வு அளிக்கப்படும் என்பதை வெளிப்படையாக அவர் தெரிவிக்கவில்லை. சம்பள உயர்வு வராதா என ஏங்கி ஊழியர்களுக்கு இந்த செய்தி நம்பிக்கையை தருகிறது, ஆனால் எப்போது என்பது இன்னும் சஸ்பென்ஸ்ல இருக்கு! இது முதல் சர்ப்ரைஸ், அப்போ 2வது சர்ப்ரைஸ் வேரியபிள் பே.

இந்திய ஐடி துறை அனைத்தும் அதிகப்படியான நெருக்கடியில் இருக்கும் போதும் டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. TCS நிறுவனத்தின் HR பிரிவின் தலைவர் மிலிந்த லக்கட் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயில், ஏப்ரல்-ஜூன் 2025 காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையை சுமார் 70%க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 100% வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதில் C2 பிரிவு வரையிலான அனைத்து ஊழியர்களும் அதிகப்படியான நன்மையை பெறுவார்கள், ஆனால் C3 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் வணிக பிரிவுகளின் செயல்பாடுகளை பொறுத்து ஊதியம் மாறுபடலாம்.

TCS நிறுவனக்தில் ஊழியர்கள் டிரைனி ஊழியர்களுக்கான Y பிரிவில் தொடங்கி, சிஸ்டம்ஸ் இன்ஜினியர் C1, C2, C3 (A & B), C4, C5 மற்றும் CXO வரை செல்கிறது. C3 மற்றும் அதற்கு மேல் இருக்கும் ஊழியர்கள் மூத்த பதவி அல்லது திட்ட நிர்வாக அளவிலான பணியில் இருப்பவர்கள்.

இந்த நிறுவனம் ஒவ்வொரு காலாண்டும் ஊழியர்களுக்கான வேரியபிள் பே ஊதியத்தை சரியான முறையில் வழங்கி வருகிறது, ஆனால் சில ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய நிதி நிலையை மேம்படுத்த வேரியபிள் பே தொகையை குறைப்பது, ஒத்திவைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று காலாண்டுகளாக ஐடி சேவை நிறுவனங்களுக்கான டாலர் வருவாய் சரிந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதேபோல் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி தடுமாற்றம் கண்டு வரும் காரணத்தால் புதிய வர்த்தகம் கிடைப்பதும் சரிந்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான் டிசிஎஸ் போன்ற பெரும் சாம்ராஜ்ஜியம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு எடுக்காமல் உள்ளது.

டிசிஎஸ் தனது ஜூன் காலாண்டில் முடிவுகளில் சுமார் 5,060 புதிய ஊழியர்களை சேர்த்தாக அறிவித்துள்ளது, இதன் மூலம் டிசிஎஸ்-ன் மொத்த ஊழியர் எண்ணிக்கையை 6,13,000-ஆக உயர்த்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+