இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்று தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஐடி சேவை துறை 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் டிசிஎஸ் தனது நீண்ட கால வாடிக்கையாளரான டிரான்ஸ்அமெரிக்கா உடனான ஒப்புந்தம் ரத்து செய்யப்பட்ட பின்பு முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

இந்த அனைத்தையும் விடவும் முக்கியமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக அதிகாரப்பூர்வமாக கிருதிவாசன் பதவியேற்று வெளியிடப்படும் முதல் காலாண்டு முடிவுகள் இது என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்று இருந்தது. இதற்கு ஏற்றார் போல் சந்தை கணிப்புகளை உடைத்து எரியும் வகையில் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் மொத்த லாபமாக சுமார் 11,074 கோடி ரூபாயை பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 17 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் மொத்த வருவாய் அளவு 13 சதவீதம் உயர்ந்து 59,381 கோடி ரூபாயாக உள்ளது. ஐடி துறையின் இந்த மோசமான காலக்கட்டத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சிறப்பான லாப அளவீடுகளை வெளியிட்டு உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது ஜூன் காலாண்டு முடிவில் இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 9 ரூபாய் வழங்கியுள்ளது. இதன் மூலம் தனது பங்கு முதலீட்டாளர்களை அடுத்த சில நாட்களுக்கு தக்க வைத்துக்கொள்ள முடியும், மேலும் வர்த்தக நேரம் முடிந்த பின்பு காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளதால் முதலீட்டாளர்கள் ரியாக்சன் உடனடியாக தெரியவில்லை.
இன்றைய வர்த்தக முடிவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் வெறும் 0.36 சதவீதம் சரிந்து 3,260.20 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. கடந்த 5 நாளில் 1.50 சதவீதமும், 1 மாதத்தில் வெறும் 0.51 சதவீத உயர்வும், 6 மாதத்தில் 3.38 சதவீத சரிவும், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரையில் 0.01 சதவீத சரிவு பதிவாகி முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது TCS.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications