டிசிஎஸ் வெளியிட்ட குட்நியூஸ்.. AI வருவாய் + டிவிடெண்ட்.. இது புதுசா இருக்கே..!

இந்திய மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஐடி துறையின் மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ்-ன் ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஐடி சேவைத்துறை நிறுவன பங்குகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாக இந்த காலாண்டு முடிவுகளை முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர்.

டிசிஎஸ் வெளியிட்ட குட்நியூஸ்.. AI வருவாய் + டிவிடெண்ட்.. இது புதுசா இருக்கே..!

வருவாய், லாபம்

ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 12,760 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய டிசிஎஸ் இந்த ஆண்டு 13,349 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை ஈட்டியுள்ளது.

இதேபோல் டிசிஎஸ் தனது ஆப்ரேஷன்ஸ் மூலம் 72,275 கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது, இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும்.

ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது காலாண்டு அடிப்படையில் 2.2 சதவீதமும், நிலையான நாணய மதிப்பில் 0.4 சதவீதமாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவுகள் 24 சதவீதமாகவும், நெட் மார்ஜின் 19.2 சதவீதமாவும் உள்ளது.

ஈவுத்தொகை

முதலீட்டாளர்களுக்கு முக்கிய செய்தியாக டிசிஎஸ் நிர்வாகம் ஒரு பங்கிற்கு 12 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது, இந்த டிவிடெண்ட் தொகையை பெற முதலீட்டாளர்கலுக்கு ஜூலை 15ஆம் தேதி பதிவு தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஏஐ வருவாய்

டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ சேவை வர்த்தக பிரிவின் வருவாய் 2.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது கடந்த காலாண்டை காட்டிலும் 13.6 சதவீதம் அதிகமாகும். ஏஐ சேவைக்காக பல்வேறு பிரிவுகளில் புதிய வர்த்தகத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது டிசிஎஸ், ஐடி ஆப்ரேஷன்ஸ் முதல் குளோபல் வர்த்தகத்தை ஆட்டோமேஷன் செய்வது வரையில் அனைத்தையும் ஆட்டோமேட் செய்யும் பணிகளும் இதில் அடக்கம்.

முக்கிய கூட்டணி

ஏஐ சேவைக்காக டிசிஎஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ஆந்திரோபிக் மற்றும் மிஸ்ட்ரால் ஆகிய நிறுவனங்களோடு முக்கியமான ஒப்பந்தம் செய்துள்ளது. ஆந்திரோபிக் உடனான கூட்டணிக்கு தனியாக ஒரு பிரிவை உருவாக்கி அதன் கீழ் 50000 ஊழியர்கள் Claude சேவைகளை பயன்படுத்த அனுமதி அளிக்க உள்ளது. இதேபோல் மிஸ்ட்ரால் போர்ஜ் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம இந்நிறுவனத்திற்கான உலகளாவிய முதல் சிஸ்டம் இன்டகிரேட்டராக இருக்க உள்ளது.

ஒப்பந்தம் மதிப்பு

டிசிஎஸ் நிறுவனத்திடம் தற்போது 19.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் பணியாற்றி வருகிறது, இதில் முக்கியமாக சமீபத்தில் SKF நிறுவனத்திடம் பெற்ற 800 மில்லியன் ஏஐ டிரான்ஸ்பார்மேஷன் திட்டமும், சர்வீஸ்நவ் உடனான மல்டி மில்லியன் டாலர் ஒப்பந்தம், ஐரோப்பாிவின் பார்சூன் 50 நிறுவனத்துடனான டீலும் இதில் அடக்கம்.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஜூன் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5,93,798 ஆக உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை 13.6 சதவீதமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+