டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனம், இத்துறையில் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்தில் முக்கியமான முடிவை எடுத்து மொத்த ஐடி சேவை துறையை வழிநடத்தில் செல்லும் முக்கிய சாம்ராஜ்ஜியம்.
உதாரணமாக கொரோனா காலத்தில் லாக்டவுன் அறிவித்த போது முதல் ஆளாய் அனைத்து ஊழியர்களுக்கும் லேப்டாப் கொடுத்து வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்து டிசிஎஸ், லாக்டவுன் காலம் பல மாதங்களை கடந்த நிலையில் புதிய ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக குடும்ப சூழ்நிலை காரணமாக ஐடி துறையில் அனுபவம் கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பெண்களை WFH கொடுத்து பணியில் அமர்த்தியது, WFH கட் செய்துவிட்டு ஊழியர்களை கட்டாயம அலுவலகம் வர சொல்லியது வரையில் இந்திய ஐடி துறைக்கு டிசிஎஸ் எப்போதும் வழிகாட்டியாகவே இருந்து வருகிறது.

இதே டிசிஎஸ் தற்போது, 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், பென்சில் நீண்ட காலம் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்து ஒட்டுமொத்த ஐடி துறையை அலறவிட்டுள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் டிரம்ப்-ன் ஹெச்1பி விசா 1 லட்சம் டாலர் கட்டணம், லாட்டரி முறையில் மாற்றம் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு வந்தது.
ஏற்கனவே இந்திய ஐடி சேவை துறையை ஏஐ தொழில்நுட்பம் பாடாய்படுத்தும் நிலையில், டிரம்ப்-ன் அறிவிப்பால் மொத்த அமெரிக்க வர்த்தகமும் பாதிக்கும் நிலையில் உள்ளது. இதற்கு மத்தியில் டிசிஎஸ் விட பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் அக்சென்சர் கடுமையான முடிவுகள் உடன் வருவாய், லாப வளர்ச்சி அளவுகளை குறைத்துள்ளது.
இப்படி பல பிரச்சனைகளுக்கு பின்பு டிசிஎஸ் தனது முதலீட்டாளர்களை காலாண்டு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் சந்திக்க உள்ளது.
எச்-1பி விசா கட்டண உயர்வு மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பணிநீக்கங்களுக்குப் மத்தியில் முதலீட்டாளர்களை எதிர்கொள்ளும் முதல் இந்திய ஐடி நிறுவனமாக டிசிஎஸ் உள்ளது. அக்டோபர் 9 அன்று டிசிஎஸ் நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.
இக்காலாண்டு முடிவுகளில் வரும் ஒவ்வொரு அறிவிப்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. பொதுவாக இந்திய ஐடி நிறுவன பங்குகள் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதல் தனிநபர் முதலீட்டாளர்கள் வரையில் விருப்பமான ஒன்றாக இருக்கும் நிலையில்,
டிசிஎஸ்-ன் இக்காலாண்டு முடிவுகள் பல தரப்பினரை பாதிக்கும் வகையில் உள்ளதால் முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இக்காலண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் நிலையான நாணய அடிப்படையில் குறையும் என கணிப்புகள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் டெக் சேவைக்கான முதலீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு அடிப்படையான விஷயமாக உள்ளது.
இதேபோல் டிசிஎஸ் நிர்வாகம் 2 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தாலும் 3 மாதம் முதல் 2 வருடம் வரையிலான severance pay கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதோடு ஏஐ துறையில் திறனை வளர்த்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையைாளர்களை பெறவும் உள்கட்டமைப்பில் துவங்கி ஊழியர்களுக்கான பயிற்சி முதல் அதிப்படியான செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இதோடு அமெரிக்காவின் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்க அமெரிக்காவில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் செலவுகள் அதிகரிக்க உள்ளது. இதேபோல் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளில் 1 லட்சம் டாலர் விஷயம் இருப்பதால் லாப அளவிலும் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்த நிதியாண்டுக்கான வருவாய், லாப அளவுகளையும் டிசிஎஸ் குறைக்க கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கணிப்புகள் உறுதியாகும் பட்சத்தில் டிசிஎஸ் பங்குகள் சரியும். வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டிசிஎஸ் பங்குகள் 0.41 சதவீதம் சரிந்து 2902.15 ரூபாயாக உள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் டிசிஎஸ் பங்குகள் சுமார் 29.41 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications