இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் வருவாய் லாபம் என அனைத்தும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
டிசிஎஸ் லாபம்
அதன் அடிப்படையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் செப்டம்பர் காலாண்டு முடிவில் 9,624 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 14.1 சதவீதம் அதிகம்.
மேலும் ஜூன் காலாண்டில் 9,008 கோடி ரூபாய் லாபமாகப் பெற்று இருந்த வேளையிலும் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ் வருவாய்
செப்டம்பர் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானத்தின் அளவ 16.8 சதவீதம் அதிகரித்து 46,867 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் நிலையான நாணய அளவீட்டில் 15.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் ஈவுத்தொகை
மேலும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குகிறகு 7 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
முக்கியத் துறை வளர்ச்சி
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்தச் செப்டம்பர் காலாண்டில் அனைத்து பிரிவுகளிலும் இரண்டு இலக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் பிடி உற்பத்தித் துறை ( 21.7 சதவீத வளர்ச்சி ), லைப் சயின்ஸ் மற்றும் ஹெல்த் கேர் ( 19 சதவீத வளர்ச்சி ), ரீடைல் மற்றும் சிபிஜி ( 18.4 சதவீத வளர்ச்சி ) பிஎப்எஸ்ஐ ( 17 சதவீத வளர்ச்சி ), கம்யூனிகேஷன் மற்றும் மீடியா ( 15.6 சதவீத வளர்ச்சி ) டெக்னாலஜி மற்றும் சேவை ( 14.8 சதவீத வளர்ச்சி ).
பிராந்திய வளர்ச்சி அளவீடுகள்
இதேபோல் சந்தைகள் அடிப்படையில் வட அமெரிக்கா ( 17.4 சதவீத வளர்ச்சி ), பிரிட்டன் ( 15.6 சதவீத வளர்ச்சி), ஐரோப்பா ( 13.5 சதவீத வளர்ச்சி ), இதேபோல் வேகமாக வளர்ச்சி அடையும் சந்தையில் இந்தியா ( 20.1 சதவீத வளர்ச்சி ), லத்தின் அமெரிக்கா ( 15.2 சதவீத வளர்ச்சி ), மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ( 13.8 சதவீத வளர்ச்சி ) ஆசிய பசிபிக் சந்தையில் 7.6 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்.
டிசிஎஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கை
செப்டம்பர் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 100 மில்லியன் டாலருக்கு அதிக மதிப்புடைய திட்டத்தின் கீழ் 5 வாடிக்கையாளர்களையும், 50 மில்லியன் டாலருக்கு அதிக மதிப்புடைய திட்டத்தின் கீழ் 17 வாடிக்கையாளர்களையும் பெற்று உள்ளது.
டிசிஎஸ் ஊழியர்கள்
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 11.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதோடு இக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக 19,690 ஊழியர்களைச் சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications