இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஐடி துறையில் முதல் நிறுவனமாகச் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது டிசிஎஸ், இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் சுமார் 55,309 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். இதேபோல் டிசிஎஸ் நிறுவனம் இக்காலாண்டில் 10,431 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 8.4 சதவீதம் அதிகமாகும்.
செப்டம்பர் காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டின் லாபம் மற்றும் வருவாய் அளவுகளில் சந்தை கணிப்பைப் பூர்த்தி செய்த டிசிஎஸ், முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு பங்கிற்குச் சுமார் 8 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகையை நவம்பர் 7ஆம் தேதி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 1.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதம் சரிந்தாலும் வரிக்கு பிந்தைய லாப அளவீட்டில் முதல் முறையாக 10000 கோடி ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியுள்ளது டிசிஎஸ்.
8.1 பில்லியன் டாலர் வர்த்தகம்
டிசிஎஸ் இக்காலாண்டில் நிலையான நாணயத்தில் வருவாய் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ரீடைல் மற்றும் CMI பிரிவுகள் இக்காலாண்டில் அதிகப்படியான வருவாயை ஈட்டியுள்ளது. மேலும் டிசிஎல் நிறுவனத்தின் வர்த்தகப் புத்தகம் 8.1 பில்லியன் டாலராக உள்ளது.
அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக 9840 ஊழியர்கள் சேர்ந்துள்ளனர், ஆனாலும் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் தொடர்ந்து உயர்வாகவே உள்ளது. இதனால் அட்ரிஷன் விகிதம் தற்போது 21.5 சதவீதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications