இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் இன்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் சந்தை கணிப்புகளை விடவும் குறைவான வருமானத்தை ஈட்டி பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி கொடுத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவில் 13 சதவீதம் அதிக வருமானத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருடாந்திர அடிப்படையில் 11 சதவீதம் அதிகரித்து 73,188 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. மேலும் இக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 15 சதவீதம் வருடாந்திர அளவில் அதிகரித்து 13,884 கோடி ரூபாயை மொத்தமாக லாபமாகப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 24 சதவீதமாகும், நெட் மார்ஜின் 19 சதவீதமாகவும் செப்டம்பர் காலாண்டில் பதிவு செய்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் தாக்கம் நாளை வர்த்தகத்தில் எப்படியிருக்கும் என்பது தான் முதலீட்டாளர்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.
AI சம்பவம்
மேலும் டிசிஎஸ் நிறுவனம் இக்காலாண்டில் ஏஐ தொழில்நுட்ப பிரிவில் மட்டும் சுமார் 3.1 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது மட்டும் அல்லாமல், இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 10 சதவீத பங்கீட்டை இப்பிரிவு மட்டுமே பெற்றுள்ளது.
பெரிய தலைகள்
டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான கே கிருதிவாசன் கூறுகையில், இக்காலாண்டில் டிசிஎஸ் அனைத்து துறையிலும், அனைத்து சந்தைகளிலும் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என தெரிவித்தார். மேலும் போர்ஷே மற்றும் Best Buy நிறுவனத்தின் ஆப்ரேஷன்களை கைப்பற்றியது மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிய வர்த்தக பிரிவும், கூட்டணி மாடலும் உருவாகியுள்ளது தெரிவித்தார்.
அடுத்தாக டிசிஎஸ் நிறுவனத்தின் சிஓஓ-வாக இருக்கும் ஆர்த்தி சுப்ரமணியன் கூறுகையில் ஏஐ பிரிவில் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ சார்ந்து பல சேவைகளுக்கு டிமாண்ட் உருவாகியிருக்கும் காரணத்தால் அதிகப்படியான வர்த்தகத்தை இப்பிரிவில் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஒப்பந்தம்
செப்டம்பர் காலாண்டின் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு அளவு 9.6 பில்லியன் டாலராக உள்ளது. இது ஐடி சேவைத் துறையில் நிலவும் மந்த நிலையைக் காட்டுகிறது. துறைவாரியாகப் பார்க்கும் போது வழக்கம் போல் BFSI பிரிவு வர்த்தக அளவிலும், வளர்ச்சியிலும் முன்னோடியாக உள்ளது. அடுத்தாக சந்தை வாரியாக பார்க்கும் போது அமெரிக்காவைக் காட்டிலும் பிரிட்டன் நாட்டில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது டிசிஎஸ்.
இக்காலாண்டில் டிசிஎஸ் ஹானிவெல் டெக்னாலஜிஸ், Aareal Bank, வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த பணிகளைப் பெற்றுள்ளது.
பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் சுமார் 3 சதவீதம் வரையில் அதிகரித்தது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் 1300 புள்ளிகள் சரிந்த வேளையிலும் உயர்வுடன் இருந்த டிசிஎஸ் பங்குகள் வர்த்தக முடிவில் 0.42 சதவீதம் சரிவுடன் 2075.25 ரூபாய் விலையில் முடிந்தது.
ஆனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் தக்கவைக்க டிசிஎஸ் நிர்வாகம் 2வது இடைக்கால ஈவுத்தொகையைக் கொடுத்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிர்வாக குழு ஒரு பங்கிற்கு சுமார் 12 ரூபாய் ஈவுத்தொகையைக் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. செப்டபம்ர் காலாண்டு முடிவில் டிசிஎஸ் 5,98,056 ஊழியர்களைக் கொண்டு உள்ளது, மேலும் இந்நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 13.3 சதவீதமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications