இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்று டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசனை டிசிஎஸ் இன்று துவக்கி வைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதியியல் முடிவுகளை அறிவித்துள்ள டிசிஎஸ், லாபத்தில் சுமார் 12% வருடாந்திர வளர்ச்சி அடைந்து சுமார் ரூ.12,380 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு அதே காலாண்டில் ரூ.11,058 கோடி அளவிலான லாபத்தை மட்டுமே பதிவு செய்திருந்தது டிசிஎஸ்.

இதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவீடுகள் சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்த காரணத்தால் நாளை வர்த்தகத்தில் இந்நிறுவன பங்குகள் தடாலடியாக உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இக்காலாண்டில் TCS நிறுவனத்தின் வருவாய் 5.6% வருடாந்திர வளர்ச்சியில் ரூ.63,973 கோடியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.60,583 கோடி மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் வளர்ச்சி சிறிய அளவில் குறைவாக இருந்தாலும், இக்காலாண்டில் டிசிஎஸ் அதிகப்படியாக ப்ராஜெக்ட்களை பெற்று இதன் மொத்த ஒப்பந்த மதிப்பு (TCV) பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ்-ன் புக் வேல்யூ 10.2 பில்லியன் டாலராக உள்ளது. இதேபோல் புக் டூ பில் அளவு 1.4 ஆக உயர்ந்துள்ளது.
இக்காலாண்டில் கன்ஸ்யூமர் பிஸ்னஸ் குரூப், எனர்ஜி, ரெசோர்ஸ் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சியும், பிராந்திய சந்தைகளில் வலுவான செயல்திறனும் தான் TCV அளவை மேம்படுத்தியுள்ளது. கன்ஸ்யூமர் பிஸ்னஸ் குரூப் (+1.1%), எனர்ஜி, ரெசோர்ஸ் மற்றும் பயன்பாடுகள் (+3.4%) மற்றும் பிராந்திய சந்தைகள் (+40.9%) வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசிஎஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிசிஎஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் கே. கிருத்திவாசன் நிறுவனத்தின் 3ஆம் காலாண்டின் செயல்திறன் மிகவும் திருப்தி கரமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பல்வேறு தொழில்கள், புவியியல் பகுதிகளில் சிறப்பாக வர்த்தகத்தைப் பெற்று, மேம்பட்ட செயல்திறனையும் வெளிப்படுத்தி நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு உள்ளதாக கே. கிருத்திவாசன் தெரிவித்தார். BFSI மற்றும் கன்ஸ்யூமர் பிஸ்னஸ் குரூப் துறைகளில் வளர்ச்சி மீண்டும் வலுவடைந்ததையும், பிராந்திய சந்தைகளின் வளர்ச்சி இக்காலாண்டில் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications