இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டிசம்பர் 31, 2025 உடன் முடிந்த காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ள வேளையில், முதலீட்டாளர்களுக்கு இனிப்பும், கசப்பும் ஓரே சாப்பிடும் உணர்வு அளித்துள்ளது. ஒருப்பக்கம் டிசிஎஸ்-ன் லாபம் வருடாந்திர அடிப்படையில் சரிந்துள்ள வேளையில் மிகப்பெரிய அளவிலான ஈவுத்தொகையை கொடுத்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் 12000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பு இன்றளவு இந்திய ஐடி சேவை துறை ஊழியர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி வருகிறது. இத்தகைய பெரும் பணிநீக்கத்திற்கு பின்பும் லாபத்தில் சரிவு பதிவாகியுள்ளது.

லாபம் சரிவு
நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.12,380 கோடியாக அளவிலான நிகர லாபத்தை பதிவு செய்த நிலையில், இந்த ஆண்டு 14 சதவீதம் குறைந்து ரூ.10,657 கோடியாக மட்டுமே பதிவு செய்துள்ளது. இது வரிக்கு பிந்தைய லாப அளவீடாகும்.
வருவாய் வளர்ச்சி
டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் குறைந்தாலும், வருவாய் வளர்ச்சி தொடர்ந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை காப்பாற்றப்பட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.67,087 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.63,973 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காலாண்டு அடிப்படையில் பார்க்கும் போது செப்டம்பர் காலாண்டுக்கும், டிசம்பர் காலாண்டுக்கும் வருவாய் வளர்ச்சி என்பது 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும் இது நிலையான நாணய அடிப்படையில் (Constant Currency) பார்க்கும் போது 0.8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆப்ரேட்டிங் லாபம்
டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாப வீதம் (Operating Margin) 25.2 சதவீதம் என்ற நிலையான அளவு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் எவ்விதமான மாற்றுமும் இல்லை. மேலும் நிகர வருமானம் ரூ.13,438 கோடியாக உள்ளது, இது வருடாந்திர அடிப்படையில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நிகர லாப வீதம் (Net Margin) 20 சதவீதமாக உள்ளது, இது முந்தைய காலாண்டை விட 0.40 சதவீதம் அதிகமாகும்.
டிசிஎஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் மொத்த ஒப்பந்த மதிப்பு (Total Contract Value) 9.3 பில்லியன் டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் கடந்த காலாண்டு முடிவுகள் முதல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம் ஏஐ சேவை மூலம் கிடைக்கும் வருவாய், முதல் முறையாக ஹெச்சிஎல் வெளியிட்ட நிலையில், டிசிஎஸ் அதன் பின்பு அறிவித்தது.
ஏஐ சேவைகளில் வளர்ச்சி
இந்திய மாட்டும் அல்லாமல் உலகளவில் அனைத்து நிறுவனங்களும் ஏஐ சேவை பயன்படுத்த துவங்கியிருக்கும் வேளையில், டிசிஎஸ்ஸும் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறது. வருடாந்திர அடிப்படையில் ஏஐ சேவைகளின் வருவாய் 1.8 பில்லியன் டாலராக உள்ளது. இது காலாண்டு அடிப்படையில் 17.3 சதவீதம் (Constant Currency) அதிகரித்துள்ளது. இது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications