சென்னை: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது 2023 ஆம் ஆண்டின் Q 4 காலண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் TCS நிறுவனத்தின், நிகர லாபத்தில் 9% அதிகரித்து, ரூ.12,434 கோடியை எட்டியது, இது கடந்த ஆண்டின் இதே Q 4 காலாண்டோடு ஒப்பிடும்போது ரூ.11,392 கோடியாக இருந்தது.
ஏப்ரல் 12 அன்று வெளியான Q 4 முடிவுகளில், அதன் வருவாய் 3.5% அதிகரித்து ரூ.61,237 கோடியாக உயர்ந்துள்ளது என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாகவே, இந்நிறுவனத்தின் Q 4 முடிவுகள் நல்ல மாற்றத்தை தரும் என்று ஆய்வாளர்கள் கூறி இருந்தனர். ஆய்வாளர்கள், சராசரியாக 10 புள்ளிகளை வைத்து இந்நிறுவனத்திடமிருந்து, ரூ.61,414 கோடி வருவாயில் ரூ.11,902 கோடி லாபத்தை எதிர்பார்த்தனர்.

TCS நிறுவனம், ஜனவரி - மார்ச் வரையிலான, முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள் எதையும் வெளியிடவில்லை என்றாலும், அவிவா, ராம்போல் மற்றும் அமெரிக்காவில் உள்ள மத்திய வங்கி ஆகியவற்றிலிருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது.
எடுத்த ஒப்பந்தங்களை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வது மற்றும் பொருளாதார சிக்கல்கள் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டதால், டிசிஎஸ் நிறுவனத்திற்கு இது ஒரு கடினமான ஆண்டாக இருந்தது. ஆனால் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்து, கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து மற்றும் கிளவுட், AI போன்ற பெரிய மாற்றங்களை செய்து அவர்கள் இதனை நேர்த்தியாக சமாளித்தனர். FY24 இல் கேம்பஸ் ஹைரிங்கில் தாமதங்கள் ஏற்பட்டாலும், FY25 க்கான புதிய கேம்பஸ் ஹைரிங்கிற்கான டெஸ்ட்களை நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
4 வது, காலாண்டில் டாடா நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது, தொடர்ந்து அதிகரித்துள்ளது. BSNL போன்ற பெரிய ஒப்பந்தங்களின் அளவை அதிகரித்தது மற்றும் உற்பத்தி, BFSI துறைகளில் முன்னேற்றம் அடைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
TCS Q3 2024 முடிவுகள்: 2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், டிசிஎஸ் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.2% நிகர லாப வளர்ச்சியைக் கண்டு ரூ.11,735 கோடியை எட்டியது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் வலுவான வளர்ச்சியுடன், அக்டோபர் - டிசம்பர் 2023 க்கான வருவாய், ஆண்டுக்கு 4% அதிகரித்து ரூ.60,583 கோடியாக உள்ளது.
எங்கள் வணிக மாதிரியின் வலிமை மற்றும் செயல்பாட்டின் சிறப்பை உறுதிப்படுத்தும் வகையில், 26 சதவீத செயல்பாட்டு மார்ஜின் மற்றும் 26 சதவீத செயல்பாட்டு வரம்புடன் Q4 FY24 ஐ முடிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கே.கிருதிவாசன் கூறினார். மார்ச் 31, 2024 நிலவரப்படி TCS இல் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 601,546. அவர்கள் 152 வெவ்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர், அவர்களில் 35.6% பெண்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications