இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2023 ஆம் நிதியாண்டுக்கான இறுதி காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 14.8 சதவீதம் அதிகரித்து 11, 436 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2022 முடிவில் டிசிஎஸ் 10,846 கோடி ரூபாய் லாபத்தை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மார்ச் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 59,162 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் இதன் அளவு 50,591 கோடி ரூபாயாக இருந்தது. 2023 ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 58,229 கோடி ரூபாயாக உள்ளது.

இது மட்டும் அல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்களையும், நிறுவன முதலீட்டாளர்களையும் மனம் குளிரும் வகையில் டிசிஎஸ் நிர்வாகம் ஒரு பங்குக்கு 24 ரூபாய் என்ற ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. டிசிஎஸ் கடந்த சில வருடங்களாக அதன் பங்குதாரர்களுக்கு அதிக ஈவுத்தொகையை அளிப்பதில் தாராளம் காட்டி வருகிறது.
மார்ச் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகசத்தில் இந்தியாவில் 13.4% வருவாய் வளர்ச்சியும், பிரிட்டன் நாட்டில் 17% வருவாய் வளர்ச்சியும், வட அமெரிக்க சந்தையில் 9.6% வருவாய் வளர்ச்சியும், ஐரோப்பிய சந்தையில் 8.4% வருவாய் வளர்ச்சியும், லத்தின் அமெரிக்காவில் 15% வருவாய் வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதேபோல் துறை வாரியாக பார்க்கும் போது மார்ச் காலாண்டில் Retail மற்றும் CPG துறையில் 13% வருவாய் வளர்ச்சியும், Life sciences மற்றும் Healthcare துறையில் 12.3% வருவாய் வளர்ச்சியும், BFSI துறையில் 9.1% வருவாய் வளர்ச்சியும், Manufacturing துறையில் 9.1% வருவாய் வளர்ச்சியும், Communication மற்றும் Media துறையில் 5.3% வருவாய் வளர்ச்சியும், Technology மற்றும் Services துறையில் 9.2% வருவாய் வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. இந்த துறை வாரியான வளர்ச்சி அடைப்படையில் ஐடி ஊழியர்கள் தங்கள் வேலைவாய்ப்பின் உத்தரவாதத்தை இந்த ரெசிஷன் காலத்தில் உறுதி செய்ய முடியும்.
மார்ச் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 6,14,795 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் 2,197 ஊழியர்கள் மொத்த எண்ணிக்கையில் குறைந்த நிலையில், மார்ச் காலாண்டில் முந்தைய எண்ணிக்கையை காட்டிலும் 821 அதிகரித்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் அட்ரிஷன் அளவு 1.2 சதவீதம் குறைந்து 20.1 சதவீதமாக உள்ளது.

2023 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் 4 காலாண்டிலும் சேர்ந்து 2.25 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டில் 1.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் 42,303 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பதிவு செய்துள்ளது இது கடந்த நிதியாண்டில் 38,449 கோடி ரூபாயாக இருந்தது.
2022 ஆம் நிதியாண்டில் 1.3 லட்சம் ஊழியர்களை சேர்ந்த நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் வெறும் 22,600 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்பது இதில் இருந்தே அனைத்து ஐடி ஊழியர்களும் தெரிந்துக்கொள்ள முடியம்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications