இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மார்ச் 31 ஆம் தேதி உடன் முடிவடைந்த 2024-25 நான்காவது காலாண்டுக்கான தனது நிதியியல் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. டிசிஎஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இக்காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.7% குறைந்துள்ளது.
பொதுவாகக் காலாண்டு அடிப்படையிலும், வருடாந்திர அடிப்படையிலும் லாபத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த டிசிஎஸ், மார்ச் காலாண்டில் நிகர லாபம் 1.7 சதவீதம் குறைந்து ரூ.12,224 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் ரூ.12,434 கோடி நிகர லாபம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ் மட்டும் அல்லாமல் இக்காலாண்டில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் அதிகப்படியான நெருக்கடியாக எதிர்கொண்ட நிலையில், வர்த்தகம், லாபம், வருவாய் அளவீடுகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் டிசிஎஸ் இந்த சவால்களை தாண்டி அதிகப்படியான வருவாய் ஈட்டியுள்ளது. இதேபோல் வரி விதிப்பு, வர்த்தக தடை போன்ற காரணத்தால் இனி வரும் காலாண்டிலும் ஐடி துறை அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடம்.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் மார்ச் காலாண்டில் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.61,237 கோடியாக இருந்த வருவாய், தற்போது 5.3% அதிகரித்து ரூ.64,479 கோடியை எட்டியுள்ளது. இதேபோல் டிசிஎஸ் இன்று கடந்த நிதியாண்டுக்கான முழு முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.
2024-25 முழு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் மொத்தம் ரூ.2,55,324 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 6% அதிகமாகும். மேலும் இது நிலையான நாணய மதிப்பு அடிப்படையில் கணக்கிடும் போது வருவாய் 4.2% ஆக உயர்ந்துள்ளது.
2024-25ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிராந்திய சந்தைகளில் காணப்பட்ட வலுவான செயல்பாடு தான் என டிசிஎஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பிராந்திய சந்தைகளில் வருடாந்திர அடிப்படையில் 37.2% என்ற சிறப்பான வளர்ச்சி பதிவாகியுள்ளது.நான்காவது காலாண்டில், டிசிஎஸ் நிறுவனம் 24.2% ஆப்ரேட்டிங் மார்ஜின், 19.0% நிகர லாப வரம்பையும் பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நிதிநிலை அறிக்கையில், வருவாய் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், லாபத்தில் ஏற்பட்ட சிறு சரிவு சந்தை கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சந்தை கணிப்பை எட்டாதது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் கவனிக்கும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications