இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்களுடைய ஊழியர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன் படி டிசிஎஸ் நிறுவனம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஊழியர்கள் 40,000 ரூபாய் போனஸ் தொகையை பெற முடியும்.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் பெரிய சவாலையும் பெரிய அளவிலான போட்டியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனம் இந்த துறையில் பணி அனுபவம் மிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே டிசிஎஸ் ஊழியர்களுக்கு bring your buddy என்ற பெயரில் employee referral திட்டத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

எனவே டிசிஎஸ்-இல் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் திறமையான நபர்களை பரிந்துரை செய்து நிறுவனத்தில் வேலைக்கு எடுக்க உதவும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த போனஸ் தொகை கிடைக்கும். உதாரணமாக ஒரு டிசிஎஸ் ஊழியர் குறிப்பிட்ட வேலைக்கு ஒரு நபரை பரிந்துரை செய்கிறார் அவர் பரிந்துரை செய்த 30 நாட்களுக்குள் அந்த நபர் வேலையிலேயே சேர்ந்து விட்டார் எனும் போது டிசிஎஸ் அந்த நபரை பரிந்துரை செய்த ஊழியருக்கு 40,000 ரூபாய் போனஸ் வழங்கும்.
இதுவே குறிப்பிட்ட அந்த நபர் 31 நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் பணியில் சேர்ந்தால் 30,000 ரூபாய் போனஸ் கிடைக்கும். அதுவே 46இலிருந்து 60 நாட்களுக்குள் அவர் பணியில் சேர்கிறார் எனும் போது 20,000 ரூபாயும், 61 லிருந்து 90 நாட்களுக்குள் அவர் பணியில் சேர்கிறார் எனும் போது 15,000 ரூபாயும் ரெஃபரல் போனஸ் தொகையாக வழங்கப்படும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
4 முதல் 15 ஆண்டுகாலம் பணி அனுபவம் கொண்டவர்களை பரிந்துரை செய்யலாம் என தெரிவித்துள்ளது. நிறுவனத்தை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில் திறன்மிகு ஊழியர்களை பணிக்கு அமர்த்தவும் அதில் ஊழியர்களையே ஈடுபடுத்தும் வகையிலும் டிசிஎஸ் இந்த முயற்சியை எடுத்துள்ளது.
கடந்த வாரம் டிசிஎஸ் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க போகக்கூடிய ஊழியர்களை நிறுவனத்திற்கு அழைத்து வாருங்கள் அதற்கான போனஸ் தொகையை பெறுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் இந்த நடைமுறை 20 ஆண்டுகளாக = தெரிவிக்கும் நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான திறன் மிகு ஊழியர்களை நாங்கள் பணியில் அமர்த்தி இருக்கிறோம் என கூறி இருக்கிறது.
இவ்வாறு வேலைக்கு வரக்கூடிய நபர் தொடர்ந்து ஆறு மாத காலம் நிறுவனத்தில் வேலையை தொடர்ந்தால் மட்டுமே இந்த போனஸ் தொகை கிடைக்கும் என்ற நிபந்தனையும் இருக்கிறது. மார்ச் 31ஆம் தேதி வரை ஊழியர்கள் இந்த பரிந்துரை வழங்கலாம். எனவே டிசிஎஸ் ஊழியர்களே உங்களுக்கு தெரிந்த திறன்மிகு நபர்களை நிறுவனத்தில் வேலைக்காக பரிந்துரை செய்து வேலையில் சேர வைத்தால் உங்களுக்கு போனஸ் தொகை கிடைப்பது உறுதி.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications