இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி ஊழியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025-26 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இன்ரு திட்டமிட்டப்படி வர்த்தக நேரம் முடிந்த உடன் அறிவித்துள்ளது.
இக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான ரூ.11,909 கோடியில் இருந்து 1.4 சதவீதம் அதிகரித்து ரூ.12,075 கோடியாக பதிவாகியள்ளது. இது, டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆனால் சந்தை நிபுணர்கள் கணித்த ரூ.12,573 கோடி அளவை விட குறைவாக பதிவாகியுள்ளது, டிசிஎஸ் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஹெச்1பி விசா மீதான கட்டணம், ஏஐ தொழில்நுட்பம், பணிநீக்கம் கட்டணம், அமெரிக்க அரசின் அவுட்சோர்சிங் மீதான வரி விதிப்பு ஆகியவை டிசிஎஸ் நிறுவனத்தை நேரடியாக பாதிக்கும் விஷயமாக அமைந்துள்ளதால், டிசிஎஸ் மீதான முதலீடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் முதலீட்டாளனர்.
இதேவிட முக்கியமாக TCS-ன் ஆப்ரேட்டிங் வருவாய் என்பது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் பதிவான ரூ.64,259 கோடியில் இருந்து 2.4 சதவீதம் அதிகரித்து ரூ.65,799 கோடியாக பதிவாகியுள்ளது. இது, நிறுவனத்தின் தொழில்துறை சேவைகளில் ஏற்பட்ட வளர்ச்சியை காட்டுகிறது.
மேலும், 2025-26-இன் முதல் காலாண்டு ரூ.63,437 கோடியுடன் ஒப்பிடுகையில், டிசிஎஸ்-ன் ஆப்ரேட்டிங் வருவாய் காலாண்டு வாரியாகவும் 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து நிலையான நாணய மதிப்பில் (Constant Currency) வருவாய் 0.8 சதவீதம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தின் இக்காலாண்டு முடிவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தது 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகை அறிவிப்பு தான். ஏற்கனவே கணிக்கப்பட்டது போல் டிசிஎஸ் நிர்வாகம் ஒரு பங்குக்கு ரூ.11-ஆக அறிவித்துள்ளது.
இந்த ஈவுத்தொகையை முதலீட்டாளர்களுக்கு அளிக்க 2025 அக்டோபர் 15 ஆம் தேதியை பதிவு தேதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2025 நவம்பர் 4-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்பட்டு பங்குதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்பு, பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு முக்கியமானது, ஏனெனில் இது அவர்களின் முதலீட்டுக்கு லாபத்தை பெறும் முக்கியமான வாய்ப்பாகும்.


Click it and Unblock the Notifications