டெல்லி: தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் சற்று பின்னடைவை சந்திக்கலாம் என்று எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
எப்படி எனினும் மும்பையை தளமாகக் கொண்ட இந்த முன்னணி ஐடி நிறுவனத்தின் பண நிலை மற்றும் நிதிக் கொள்கைகள் தொடர்ந்து அதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் S&P global ratings கூறியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மீதான எங்களது நேர்மறையான பார்வையை, நிலையானதாக மாற்றியமைக்கிறோம் S&P என்றும் தெரிவித்துள்ளது.
கடன் மதிப்பீடு
அதே நேரத்தில் எங்கள் ஏ என்று கடன் மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் டிசிஎஸ் அடுத்த 12 - 24 மாதங்களுக்கு, அதன் நல்ல போட்டி நிலை மற்றும் வலுவான பண இருப்பு, பணப்புழக்கத்தினை பராமரிக்கும் என்றும் எஸ்&பி கூறியுள்ளது. கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8% சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
செலவினங்கள் குறையும்
நடப்பு ஆண்டில் சர்வதேச நிறுவனங்களின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செலவினங்கள் நான்கு சதவீதமாக சுருங்கும் என்றும் எஸ் அன்ட் பி குளோபல் மதிப்பீடுகள் மதிப்பிட்டுள்ளன. இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மார்ச் 2021வுடன் முடிவடையும் நிதியாண்டில் 0.1% அதிகரிக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று எஸ்&பி தெரிவித்துள்ளது.
அழுத்தம் அதிகரிக்கலாம்
மேலும் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்த புதுபித்தல்களுக்கான விலை அழுத்தங்களை எதிர்பார்ப்பதாகவும், ஏனெனில் அதிக போட்டி நிறைய சந்தையில் வாடிக்கையாளர் செலவு என்பது குறைவாகவே உள்ளது. எனினும் டிசிஎஸ்-ஸின் வலுவான செயல்பாட்டு பணப்புழக்கங்கள் மற்றும் விவேகமான நிதிக் கொள்கைகள், அதன் வலுவான கடன் விவரத்தினை காட்டுகின்றன.
விவேகத்துடன் செயல்பட வேண்டும்
நிச்சயமற்ற வணிக சூழலைக் கருத்தில் கொண்டு டிசிஎஸ் நிறுவனம் அதன் மூலதன ஒதுக்கீட்டுக் கொள்கையில் விவேகத்துடன் இருக்க வேண்டும். மேலும் அதன் வலுவான பண நிலையை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் எஸ் & பி தெரிவித்துள்ளது.
வலுவான லாபத்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்
கடந்த ஜூன் 30, 2020 நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனம் பூஜ்ஜிய கடனை கொண்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் அதன் நிலையை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட டிசிஎஸ் அதன் வணிகத்தினை மேம்படுத்த வேண்டும். அதன் லாபத்தினை 30% ஆக பராமரிக்க வேண்டும் என்றும் எம் & பி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications