இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் தங்க முட்டையிடும் வாத்தாக இருக்கும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் தமிழ்நாட்டில் தொடர்ந்து தனது இருப்பை அதிகரித்து வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் சென்னையில் அதிகப்படியான பணியாளர்களையும், மிகப்பெரிய அலுவலகத்தை சிறுசேரி சிப்காட்டில் வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது.
சிறுசேரி சிப்காட்டின் அடையாளமாக விளங்கும் டிசிஎஸ், தொடர்ந்து தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் சிறுசேரியில் டிசிஎஸ் தனது புதிய கேம்பஸ்-ஐ ரூ.876 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது, இதில் 11 தளங்களைக் கொண்ட 3 கட்டிடங்கள் அமைய உள்ளன.

இந்த மாபெரும் அலுவலக கட்டிடம் மொத்தம் 3.34 மில்லியன் சதுர அடி அலுவலக இடவசதியுடன் அமைய உள்ளது. இதன் மூலம் இந்த 3 அலுவலக கட்டிடத்தில் சுமார் 25,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறிய நகரங்களிலிருந்து வரும் மக்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கப்போகிறது.

TCS இந்த 3 அலுவலக கட்டிடத்திற்கான திட்டத்தை 2021-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த முதலீடு மற்றும் அலுவலக இடவசதி, IT துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். TCS சிறுசேரியில் விரிவாக்கும் செய்வது மூலம் தங்கள் சேவைகளை வலுப்படுத்தி, உலகளவில் சேவை விநியோகத்தை சென்னையில் இருந்து விரிவாக்கம் செய்யப்போகிறது.
TCS கேம்பஸ் விரிவாக்கம் தமிழ்நாட்டு IT ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறப்போகிறது. சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இத்திட்ட விரிவாக்கம் மூலம் கிடைக்கப்போகிறது. இதேபோல் தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும் இது புதிய வேலைவாய்ப்புகளை ஈட்டித்தரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications