டிசிஎஸ் $140 மில்லியன் இழப்பீடு கொடுக்கணும்.. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..TCS - Epic case!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் மருத்துவ மென்பொருள் நிறுவனமான எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம், டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் மீது வர்த்தக ரகசிய வழக்கில், டாடா கன்சல்டன்ஸிக்கு எதிராக 280 மில்லியன் டாலர் தண்டனையானது அதிகமானது என்று அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

எனினும் சிகாகோவில் உள்ள நீதிமன்றம் 140 மில்லியன் டாலர் இழப்பீட்டினை உறுதி செய்துள்ளதாக, இன்று பங்கு சந்தைக்கு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது.

ஆனால் இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள டிசிஎஸ் நிறுவனம், நாங்கள் தவறாக பயன்படுத்தியதற்காக எந்த ஆதாரமும் இல்லை என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ்-க்கு எதிராக வழக்கு

டிசிஎஸ்-க்கு எதிராக வழக்கு

அதோடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன் டிசிஎஸ் தனது நிலைப்பாட்டை தீவிரமாக பாதுகாக்கும் என்று அது கூறியது. எபிக் மென்பொருள் நிறுவனம் தங்களது அறிவுசார் சொத்துக்களை திருடியதாக, கடந்த 2014ல், டிசிஎஸ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 2016ல் எபிக் 940 மில்லியன் டாலரினை வென்றதாகவும் கூறப்படுகிறது.

தீர்ப்பு மாற்றம்

தீர்ப்பு மாற்றம்

2017ல் விஸ்கானின் நீதிமன்ற நீதிபதி, இந்த தொகையினை 420 மில்லியன் டாலர்களாக குறைத்தார். 2018ல் டிசிஎஸ் நிறுவனம் எபிக் சிஸ்டம்ஸிக்கு 440 மில்லியன் டாலர் கொடுத்ததாகவும் கூறியுள்ளது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த விஸ்கானின் நீதிபதி தீர்ப்பினை மாற்றியமைத்தார்.

மருத்துவ சாப்ட்வேர் நிறுவனம்

மருத்துவ சாப்ட்வேர் நிறுவனம்

இதற்கிடையில் டிசிஎஸ் சிகாகோவில் உள்ள ஏழாவது சுற்று மேல்முறையீட்டிற்காக தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எபிக் சிஸ்டம்ஸ் விஸ்கானில் உள்ள வெரோனாவை தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனமாகும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் அமெரிக்கா முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார வசதிகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ பதிவு முறைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகும்.

டிசிஎஸ் பங்கு விலை

டிசிஎஸ் பங்கு விலை

இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பீடு தொகையை, இழப்பீடாக கொடுக்க அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதன் பங்கு விலையானது சற்று குறைந்து 2248 ரூபாயாக காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS said stock exchanges US court upholds $140 million compensation

TCS - Epic Systems case.. TCS said stock exchanges US court upholds $140 million compensation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X