இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றான TCS நிறுவனத்தில் பல வருடங்களாக பிரஷர்களுக்கான (Freshers) சம்பளம் உயராமல் இருப்பது குறித்த பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் இந்த போஸ்ட் பெற்றுள்ளது. 2019-ஆம் ஆண்டு TCS நிறுவனம் ஷஷாங்க் ரஸ்தகி என்ற நபருக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்கியதாகவும், அப்போது அவரது மாதச் செலவு ரூ.30,000 ஆக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் 2024-ஆம் ஆண்டிலும் டிசிஎஸ் நிறுவனம் இதே சம்பளத்தை தான் பிரஷர்களுக்கு வழங்குகிறது.
2019-ஆம் ஆண்டில் ஷஷாங்க் ரஸ்தகி என்னும் நபர் TCS நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு மாத ஊதியமாக ரூ. 21,000 வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போதே தனக்கு வாழ்க்கைச் செலவு 30,000 ரூபாயாக இருந்ததாக கூறியுள்ளார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், TCS சம்பளம் பணவீக்கத்துடன் மாறவில்லை என்பது தான். இந்த தொழில்நுட்ப வல்லுநரின் கூற்றுப்படி, TCS நிறுவனம் இன்றும் பிரஷர்களுக்கு மாதத்திற்கு ரூ. 21,000 என்ற அதே சம்பளத்தை தான் வழங்குகிறது.
அவரது பதிவு X தலத்தில் வைரலானது, பல தொழில்நுட்ப வல்லுநர்கள் TCS நிறுவனத்தில் மட்டுமல்லாமல் மற்ற முன்னணி IT நிறுவனங்களிலும் சம்பளம் மாறவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், TCS தான் அதிக விமர்சனங்களைச் சந்தித்தது. ஏனெனில் பல IT தொழில்நுட்ப வல்லுநர்கள் 2008-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அதே சம்பளத்தைப் பெற்றதாக கூறியுள்ளனர்.
"எனது முதல் ஆஃபர் TCS நிறுவனத்திடமிருந்து ஆஃப் கேம்பஸ் டிரைவிலிருந்து கிடைத்தது. TCS நிறுவனம் 2013-ஆம் ஆண்டிலும் 21,000 ரூபாயை தான் சம்பளமாக வழங்கினர்,” என்று ஒரு X பயனர் ஜதின் பதிவிட்டுள்ளார்.
"இன்னொரு X பயனர் பவன் என்பவர் 2011-ஆம் ஆண்டு தனக்கும் TCS நிறுவனம் அதே சம்பளத்தை வழங்கியதாக கூறினார். அவர்கள் இன்னமும் சம்பளத்தை மாற்றாதது ஆச்சரியமாக இருக்கிறது," என்று கூறியுள்ளார்.
"எனது TCS சம்பளம் 2008-ஆம் ஆண்டிலும் ரூ.21,000 ஆக இருந்தது," என்று எக்ஸ் பயனர் பூஜா கூறியுள்ளார்.
அவரது போஸ்டுக்கு தொடர்ந்து பல கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஷஷாங்க் ரஸ்தகியின் இந்திய நிறுவனங்களின் சம்பளங்கள் குறித்த கருத்து பெரும் விவாதத்தைத் தொடங்கியுள்ளது. அவரது பதிவு எக்ஸில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. பல எக்ஸ் பயனர்கள் IT நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களில் சம்பள உயர்வு குறித்த பிரச்சனை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது சம்பளங்கள் கடந்த பல ஆண்டுகளாக கிட்டத்தட்ட நிலையாக இருப்பதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இது தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு இனி வரும் நாட்களில் இது போன்ற முன்னணி IT நிறுவனங்கள் தங்களுடைய சம்பளத்தை அதிகரிக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications