அயர்லாந்தின் ஓய்வூதிய முறையை மாற்றுவதற்காக 15 ஆண்டுகால ஒப்பந்தத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கையெழுத்திட்டுள்ளது. இதனால் 8 லட்சம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் புதிதாக ஒரு ஓய்வூதிய தளத்தை உருவாக்கி TCS வழங்கவுள்ளது. இதன் கீழ் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தை எளிதாக சேமிக்கவும், நிர்வகிக்கவும் உதவும்
இந்த ஒப்பந்தத்தின்படி TCS நிறுவனம், அயர்லாந்தில் உள்ள தொழிலாளர்களை தானியங்கி முறையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கும் டிஜிட்டல் தளத்தை உருவாக்கி வழங்க உள்ளது. எளிதாக ஊழியர்களை சேர்க்கவும், ஊழியர்களின் பதிவுகளை நிர்வகிக்கவும், ஊழியர்களுக்கான பலன்களை வழங்கவும், இந்த ஓய்வூதிய தளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த சேவைகள், அயர்லாந்தின் டோனகல் கவுண்டியில் உள்ள TCS-இன் குளோபல் டெலிவரி மையம் மூலம் வழங்கப்பட உள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இதற்கு முன்பு UK மற்றும் பிற நாடுகளிலும் இதே போன்ற ஓய்வூதிய தளங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தை பயன்படுத்தி அயர்லாந்து அரசின் சமூக பாதுகாப்புத் துறையுடன் இணைந்து அயர்லாந்து தொழிலாளர்களுக்கு "My Future Fund" என்ற பெயரில் ஓய்வூதிய சேமிப்பு தளத்தை வழங்க உள்ளது.
டிசிஎஸ் 2023-ஆம் ஆண்டில், நேஷனல் எம்ப்ளாய்மென்ட் சேவிங்ஸ் டிரஸ்ட்டுடன் (NEST) இணைந்து UK-விற்கு மிகப்பெரிய ஓய்வூதியத் திட்டத்தின் நிர்வாகச் சேவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றியமைப்பதற்காக 10 ஆண்டுகளில் $1.1 பில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தற்போது அயர்லாந்திலும் இதே போல ஓய்வூதிய முறையை கொண்டு வர டிசிஎஸ் செயல்பட உள்ளது. மேலும் கடுமையான டெண்டர் செயல்முறைக்குப் பிறகு டிசிஎஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் இதே போன்ற ஓய்வூதிய சேவையை வழங்கி உள்ளதால் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதற்கான அனுபவத்தைப் பெற்றிருக்கும் என்று அயர்லாந்தின் சமூக பாதுகாப்பு மினிஸ்டரான ஹீதர் ஹம்ப்ரேஸ் கூறியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனம் யுகே மற்றும் அயர்லாந்தில் முக்கியமான மாற்றத் திட்டங்களை வழங்குவதில் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைக் கொண்டுள்ளது. இந்த அனுபவத்தையும் சந்தையைப் பற்றிய அறிவையும் பயன்படுத்தி, அயர்லாந்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவோம் என்று TCS-இன் BFSI தயாரிப்புகள் பிரிவின் தலைவர் விவேகானந்த் ராம்கோபால் கூறியுள்ளார்.
"அயர்லாந்து நாட்டில் இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவரான தீபக் சவுதாரி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்திற்கு எங்களுடைய ஆழமான அறிவை பயன்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications